×
 
☰

#BREAKING: தாராபுரத்தில் பதற்றம்..! நாதக கார்த்திகாவிடம் விசாரணை..! காவல் நிலையத்தில் குவியும் நாதகவினர்..!

நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி கார்த்திகா தாராபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 9-பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தாராபுரம் காவல் நிலையம் முன்பு நாம் தமிழர் கட்சியினர் திரண்டு வருகின்றனர். நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 9-பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை தாராபுரம் காவல் நிலையம் அழைத்து வரவில்லை என நாம் தமிழர் கட்சியினர் குற்றம்சாட்டி இருந்தனர்.

கார்த்திகா மாநில மகளிர் அணி செயலாளர், அவரது கணவர் முருகு சந்திரகுமார், தென்காசியை சேர்ந்த இசை மதிவாணன் மாநில கொள்கை பரப்பு செயலாளர், சஞ்சய் காந்தி தாராபுரம் தேர்தல் பொறுப்பாளர், மூலனூர் கந்தசாமி, ஷேக்பரீத் தாராபுரம் நகர பொறுப்பாளர், சூர்யா தாராபுரம் மாணவர் பாசறை செயலாளர், சென்னை பகுதி செயலாளர் கோகுல் என எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 இவர்கள் தாராபுரம் குண்டடம் என எந்த காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார்கள் எங்க விசாரிக்கப்படுகிறார்கள் என்ற தகவல் முழுமையாக தரப்படவில்லை எனவும் கைது செய்யப்பட்ட அவர்களது உறவினர்களுக்கு கூட என்ன வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என தெரிவிக்காமல் அரசியல் பழிவாங்கும் நோக்குடன் 20 நாட்களுக்கு பிறகு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாம் தமிழர் கட்சியினர் தாராபுரம் காவல் நிலையம் முன்பு கூடி வருகின்றனர்.

இதையும் படிங்க: நாதகவினர் கைது..! அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம்..!! TTV தினகரன் விளாசல்.!

இந்த நிலையில், காவல் நிலையத்திற்கு கார்த்திகா அழைத்து வரப்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சியினர் குவிந்துள்ளதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டு உள்ளது. நாம் தமிழர் கட்சியினர் கைது செய்யப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஜெயிலர் 2 வெற்றி..! நடிகர் ரஜினிகாந்துக்கு தலைமுறை கடந்தும் ரசிகர்கள்...! சீமான் வாழ்த்து..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share