" இன்னைக்கு ஒரு புடி ..." - சீமான் பிறந்தநாள் ... தம்பிகளுக்கு 18 வகை உணவுடன் தடபுடல் விருந்து ...!
18 வகையான அசைவ விருந்தை தமிழ்நாடு முழுவதிலிருந்தும் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க வரக்கூடிய தொண்டர்களுக்கு சீமான் விருந்து வைக்கிறார்.
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் 59வது பிறந்தநாளினை முன்னிட்டு தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு தடபுடலான விருந்தானது ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது 59வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். சீமானின் 59வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக நீலங்கரையில் இருக்கக்கூடிய அவரது இல்லத்திற்கு தமிழ்நாடு முழுவதிலும் இருந்து நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் வருகை தந்து கொண்டிருக்கின்றனர்.
அப்படி வருகை தரும் நாகக தொண்டர்களுக்கு சீமான் வீட்டில் தடபுடலான அசைவ விருந்து தயாராகி வருகிறது. கிட்டத்தட்ட 18 வகையான உணவுகள் தொண்டர்களுக்கு சீமான் வீட்டில் தயாராகி வருகிறது.
மட்டன் பிரியாணி, மட்டன் சுக்கா, நல்லி எலும்பு உள்ளிட்ட 18 வகையான அசைவ விருந்தை தமிழ்நாடு முழுவதிலிருந்தும் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க வரக்கூடிய தொண்டர்களுக்கு சீமான் விருந்து வைக்கிறார்.
இதையும் படிங்க: நாசமா போச்சு... கோவில் நகரத்தை குப்பை மேடாக்கியதுதான் திமுக சாதனை..! சீமான் விமர்சனம்
மட்டன், சிக்கன், மீன் என 18 வகைகளில் அசைவ விருந்து தயாராகிறது. மேலும் சீமான் பிறந்தநாள் விருந்தில் முட்டை வருவல், சிக்கன் 65, தலைக்கறி உள்ளிட்ட அசைவ உணவுகளும் இடம் பெற்றுள்ளன. அத்துடன் சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், வடை, பாயாசம் என சைவ உணவுகளும் தயாராகி வருகிறது.
தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு பகுதிகளிலிருந்து சீமானின் 59வது பிறந்தநாளை முன்னிட்டு அவர்களை வாழ்த்து தெரிவிப்பதற்காக நாதக தொண்டர்கள் சீமான் இல்லத்திற்கு படையெடுத்து வரும் நிலையில், அவர்களுக்கு சீமான் அசைவு விருந்து வழங்கி அசத்தி வருவது அனைவரையும் கவர்ந்துள்ளது.
இதையும் படிங்க: பெருங் கலைஞன்... பேராளுமை..! கமல்ஹாசனுக்கு புகழ் மகுடம் சூட்டிய சீமான்...!