×
 

செத்து சாம்பல் ஆனாலும் தனிச்சு தான் போட்டி! யாரும் அசைக்க முடியாது... சீமான் திட்டவட்டம்

செத்து சாம்பல் ஆனாலும் தனித்து தான் போட்டி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டவட்டமாக தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசியல் களத்தில் தமிழ்த் தேசியக் கொள்கைகளை முன்னிறுத்தி, தனித்து நின்று தேர்தல்களை எதிர்கொள்ளும் ஒரு தனித்துவமான அரசியல் சக்தியாக நாம் தமிழர் கட்சி உருவெடுத்துள்ளது.

2010 ஆம் ஆண்டு செந்தமிழன் சீமானால் தொடங்கப்பட்ட இந்தக் கட்சி, தொடக்கம் முதலே கூட்டணி அரசியலை நிராகரித்து, தனித்து போட்டியிடுவதை ஒரு கொள்கையாக முன்னிறுத்தி வருகிறது. 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலிலும், செத்து சாம்பலானாலும் தனித்து நிற்போம் என்று சீமான் அழுத்தமாக அறிவித்துள்ளார். 

2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக 234 தொகுதிகளிலும் தனித்து நின்று, 4,58,104 வாக்குகளைப் பெற்று 1.1% வாக்கு விழுக்காட்டை அடைந்தது. இது கட்சியின் முதல் முயற்சியாக இருந்தாலும், பெண்களுக்கு 50% பிரதிநிதித்துவம், பட்டியலின வேட்பாளர்களை பொதுத் தொகுதிகளில் நிறுத்துதல், மற்றும் ஒரு திருநங்கை வேட்பாளரை நிறுத்துதல் போன்ற முன்னோடி முடிவுகளால் கவனம் ஈர்த்தது.

இதையும் படிங்க: போராடும் தூய்மை பணியாளர்கள்.. செவி சாய்க்காத அரசு! நாம் தமிழர் கட்சி போராட்டம் அறிவிப்பு

2019 நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் "கரும்பு விவசாயி" சின்னத்தில் தனித்து போட்டியிட்டு, 16,95,037 வாக்குகளுடன் 3.89% வாக்கு விழுக்காட்டைப் பெற்றது. 2021 சட்டமன்றத் தேர்தலில், 234 தொகுதிகளிலும் ஆண்-பெண் வேட்பாளர்களை சமமாக நிறுத்தி, 31,37,095 வாக்குகளுடன் 6.72% வாக்கு விழுக்காட்டை அடைந்து, தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது.

2024 நாடாளுமன்றத் தேர்தலில், "மைக்" சின்னத்தில் போட்டியிட்டு, 36,00,088 வாக்குகளுடன் 8.19% வாக்கு விழுக்காட்டைப் பெற்று, 2025 ஜனவரி 10 அன்று இந்திய தேர்தல் ஆணையத்தால் மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது. 

இந்த நிலையில் 2026 சட்டமன்ற தேர்தலிலும் தனித்தே போட்டியிடுவோம் என்று சீமான் ஏற்கனவே அறிவித்தார். அதனை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார். செத்து சாம்பல் ஆனாலும் 2026 தேர்தலில் நாங்கள் தனித்து தான் போட்டியிடுவோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் 

1.1 சதவீதம் வாக்குகள் பெற்ற ஒரு கட்சி 8.22 சதவீதம் வாக்குகள் பெற்ற அரசியல் கட்சியாக மாறியதாக தமிழக வரலாற்றில் உண்டா என்ற கேள்வி எழுப்பிய சீமான்,  எல்லா கட்சியும் செத்து போய் விடும் என்றும் கலைந்து ஓடி விடுவார்கள் எனவும் கூறினார்.

த.வெ.க. வருவதால் நா.த.க. கட்சிக்கு வாக்குகள் குறைந்து விடும் என்கிறார்கள் , இப்படி பயன்பாட்டுவது ஏனென்றால் அப்போதாவது கட்சி கலைந்து விடும் என்றும் ஏதாவது ஒரு கூட்டணிக்கு போய்விடுவார் என்பதற்காக தான் எனவும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: அவங்க சரியா தானே சொல்லிருக்காங்க.. கோபி சுதாகருக்கு வக்காலத்து வாங்கும் சீமான்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share