பெயரிலேயே காந்தம்... திரை பேராளுமை... ரஜினிகாந்துக்கு சீமான் வாழ்த்து...!
நடிகர் ரஜினிகாந்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
திரைத்துறையில் காலத்தால் அழியாத ரசிக பட்டாளத்தை பெற்றுள்ள நடிகர் ரஜினிகாந்தின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தை நிறைவு செய்தவர். தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தைத் தொடங்கினார். இந்த 50 ஆண்டு காலப் பயணம், ஒரு சாதாரண மனிதனின் அசாதாரண வெற்றிக் கதையாகவும், தமிழ் சினிமாவை உலக அளவில் கொண்டு சென்ற புரட்சிகரமான பயணமாகவும் அமைந்துள்ளது. எந்தவித பின்புலமும் இல்லாமல், வறுமையையும், வாழ்க்கையின் போராட்டங்களையும் கடந்து, இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உயர்ந்த ரஜினியின் கதை, உழைப்பு, நம்பிக்கை, மற்றும் தனித்துவமான பாணியின் வெற்றிக் காவியம்.
நடிகர் ரஜினிகாந்த் என்று தனது பிறந்த நாள் கொண்டாடுகிறார். அவருக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். தன்னுடைய தனித்துவமிக்க நடிப்பாற்றலாலும், தனக்கே உரித்தான நடையுடை, பாவனைகளாலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மூன்று தலைமுறையினரை காந்தமாய் ஈர்ப்பதால் தான் என்னவோ அவரது பெயரிலேயே காந்தம் வந்ததமைந்ததோ என்று எண்ணும் அளவிற்குப் பெயருக்குப் பொருத்தமாய் வாழும் மேதை என்று இந்தியப் பெருநாட்டைக் கடந்து, உலகம் முழுக்க தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கும் அளவிற்கு வல்லமை படைத்த திரை ஆளுமை என தெரிவித்தார்.
தமிழ்த்திரையுலகில் எல்லோராலும் கொண்டாடப்படும் உச்ச நட்சத்திரமாக அரை நூற்றாண்டாகத் திகழும் பெருமதிப்பிற்குரிய ஐயா ரஜினிகாந்த் அவர்களின் 75 வது பிறந்தநாளில் அன்புநிறைந்த வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெரிதும் மகிழ்கிறேன் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: பி. ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை... அரசு செய்தால் சட்டம்... சாமானியன் செய்தால் குற்றமா? சீமான் கொந்தளிப்பு...!
இன்றைய நாளில் நம் அனைவரின் உள்ளத்தையும் கவர்ந்து மாபெரும் வெற்றிப்படைப்பாக சாதனை படைத்த 'படையப்பா' திரைப்படம் மறுதிரையிடப்படுவது மட்டற்ற மகிழ்ச்சியையும், திரையில் மீண்டும் காண வேண்டும் என்ற ஆர்வத்தையும் ஏற்படுத்துகின்றது என்றும் அதோடு, படையப்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 'நீலாம்பரி' என்ற பெயரில் உருவாவது குறித்த ரஜினிகாந்த் முன்னறிவிப்பும் பேராவலைத் தூண்டுகிறது என்றும் தெரிவித்தார். அத்திரைப்படமும் விரைவில் வெளியாகி மாபெரும் வெற்றிப்படைப்பாக அமைய என்னுடைய அன்பும், வாழ்த்துகளும் என சீமான் கூறினார்.
இதையும் படிங்க: பேராபத்து காத்திருக்கு..! கூடங்குளம் அணு மின் நிலையத்தில் முழு பயன்பாடு.. சீமான் எச்சரிக்கை...!