அதிமுகவில் காளியம்மாள்? தமிழ்தேசியம் TO திராவிடம்..! அரசியலில் திருப்புமுனை..!
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள் அதிமுகவில் இணைய இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் முக்கியமான பெண் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் காளியம்மாள். கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பு வகித்து வந்தார். தமிழ்த் தேசியக் கொள்கைகளை வலியுறுத்தி, குறிப்பாக மீனவர் சமூகத்தில் இருந்து வந்து, பல்வேறு போராட்டங்கள் மற்றும் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டவர். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் NTK சார்பில் போட்டியிட்டு கவனம் ஈர்த்திருந்தார்.
அவரது பேச்சுகள் காரமானவை, உணர்ச்சிகரமானவை. கட்சியின் உறுப்பினர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன.ஆனால் 2025 பிப்ரவரி மாதத்தில், காளியம்மாள் அதிகாரப்பூர்வமாக நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏனென்றால், அண்மைக் காலமாக NTK-யில் இருந்து பல நிர்வாகிகள், தொண்டர்கள் விலகி வரும் சூழலில் இது நடந்தது. காளியம்மாள் தனது விலகல் அறிக்கையில் மனம் வருந்துவதாகவும், கனத்த இதயத்துடன் இந்த முடிவை எடுத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். கட்சியோடு பயணித்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி தெரிவித்தார்.
இதையும் படிங்க: வழக்கம்போல் LIVE CUT..! திமுக மிரண்டு போய் இருக்கு..! அதிமுக கடும் விமர்சனம்..!
அவர் தமிழக வெற்றி கழகத்தில் இணைய இருப்பதாக தகவல்கள் பரவின. ஆனால் அதனை அவர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். காளியம்மாள் பாஜகவில் இணைய இருப்பதாகவும் கூறப்பட்டது. பாஜக முக்கிய தலைவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக காளியம்மாள் விளக்கம் அளித்திருந்தார். இதற்கிடையில் அதிமுகவில் காளியம்மாள் இணைய இருப்பதாக தகவல்கள் பரவியுள்ளன. குறிப்பாக காளியம்மாளிடம் அதிமுக நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும் நாளை அவர் அதிமுகவில் இணை இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆளுநர் மைக் OFF? திட்டமிட்ட வேலை..! அவ்வளவும் பச்சை பொய்... அமைச்சர் ரகுபதி விளாசல்..!