×
 
☰

ஒப்பந்த அடிப்படையில் செவிலியர் நியமனம்..! ஏமாறாதீங்க..!! இடைத்தரகர்களை நம்பாதீங்க..! தமிழக அரசு எச்சரிக்கை..!!

ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் பணி நியமன விவகாரத்தில் பல்வேறு அறிவுறுத்தல்களை மக்கள் நல்வாழ்த்துக்கள் வெளியிட்டுள்ளது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சமீபத்தில் ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர் பணி நியமனம் தொடர்பான முக்கிய பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் இந்த நியமன செயல்முறை முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும் தகுதி அடிப்படையிலும் நடைபெற்று வருகிறது என்பதை துறை உறுதிப்படுத்தியுள்ளது.

இதுபோன்ற முக்கியமான பணிவாய்ப்புகள் அரசு முறைப்படி நடத்தப்படுவதால், விண்ணப்பதாரர்கள் எந்தவிதமான தேவையற்ற அச்சமும் இல்லாமல் செயல்படலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.செவிலியர் பணி தேர்வு மற்றும் நியமனத்திற்காக விண்ணப்பதாரர்கள் எவ்வித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என்பதை துறை தெளிவாக வலியுறுத்தியுள்ளது.

பணம் அல்லது ஏதேனும் ஆதாயத்தைப் பெற்றுக்கொண்டு நியமன செயல்முறையில் தலையீடு செய்ய முடியும் எனக் கூறி ஏமாற்ற முயலும் தனிநபர்கள் அல்லது இடைத்தரகர்களை நம்பவோ அவர்களுடன் தொடர்பு கொள்ளவோ வேண்டாம் என விண்ணப்பதாரர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய போலி வாக்குறுதிகளுக்கு இரையாவது விண்ணப்பதாரர்களின் நேரத்தையும் பணத்தையும் வீணடிப்பதோடு சட்டரீதியான சிக்கல்களையும் உருவாக்கக்கூடும். எனவே அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளை மட்டுமே நம்பி செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதையும் படிங்க: அடுத்த பெயர் மாற்றம்!! ‘மீண்டும் மஞ்சப்பை’ இனி ‘துணிப்பை’.. 105 இடங்களில் இயந்திரங்கள்!!

இதுபோன்ற சந்தேகத்திற்குரிய சம்பவங்கள் ஏதேனும் கவனத்திற்கு வந்தால் உடனடியாக அறிவிக்க வேண்டும். புகார்கள் அல்லது குறைகளை தெரிவிக்க 8754448477 என்ற தொலைபேசி எண்ணையும் dph.nursesrecruitment.grievance@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியையும் பயன்படுத்தலாம். இந்த தொடர்பு வழிகள் மூலம் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என துறை உறுதியளித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது உரிமைகளை பாதுகாத்துக்கொள்ளவும் நியாயமான செயல்முறை தொடரவும் இந்த வசதிகளை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

 

இதையும் படிங்க: வாரிசுச் சான்றுக்கு லஞ்சம்... ஆவடியில் VAO அதிரடி ARREST..!! லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share