×
 

செவிலியர்களை விடுவிக்கணும்... வாக்குறுதியை நிறைவேற்ற EPS வலியுறுத்தல்...!

கைது செய்யப்பட்ட செவிலியர்களை விடுவிக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் 500க்கும் மேற்பட்ட செவிலியர்கள் நள்ளிரவு நேரத்தில் கொட்டும் பனியையும் பொறுத்தப்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் செவிலியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 3 பணியிடங்களை மீண்டும் உருவாக்கிட வேண்டும், கொரோனா காலகட்டத்தில் பணி செய்து பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று சேப்பாக்கம் சிவானந்த சாலை பகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களை மாலை 4 மணிக்கு பிறகு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் மாநகர பேருந்து மூலமாக ஏற்றி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் சுமார் 400க்கும் மேற்பட்ட செவிலியர்கள் இறக்கி விடப்பட்ட நிலையில், அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லாமல் பேருந்து நிலையத்தின் நடைமேடை 9-ல் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அவர்களை மீண்டும் கைதுசெய்து அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளதாகவும் இந்த சம்பவத்திற்கு தனது கண்டனத்தை தெரிவிப்பதாகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்... டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடும் இபிஎஸ்... விளாசிய முதல்வர்...!

திமுக ஸ்டாலின் அரசு, 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலின்போது செவிலியர்களுக்கு அளித்த வாக்குறுதி எண் 356ஐ நிறைவேற்றக்கோரியும், அம்மாவின் அரசால் கொரோனா காலகட்டத்தில் பணியமர்த்தப்பட்டு, தற்போதைய விடியா திமுக அரசால் பணிநீக்கம் செய்யபட்ட அனைத்து செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல வாக்குறுதிகளை நிறைவேற்றக்கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களை உடனடியாக விடுவிப்பதுடன், 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். 

இதையும் படிங்க: மாஸ் ஆரம்பம்...! இபிஎஸ் பெயரில் முதல் விருப்ப மனு… களைகட்டிய அதிமுக தலைமைக் கழகம்…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share