"பாசிசம்... பாயாசம்-ன்னு ரைய்மிங்"..! செவிலியர்களை அடக்குவது அக்கிரமம்... EPS எதிர்ப்பு..!!
செவிலியர்கள் பிரச்சனையை சுட்டிக்காட்டி எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி செவிலியர்கள் மீதான காவல்துறை நடவடிக்கையை கடுமையாகக் கண்டித்துள்ளார். தங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அறவழியில் போராட்டம் நடத்திய செவிலியர்கள் மீது தற்போதைய திமுக அரசின் காவல்துறை அரங்கேற்றியுள்ள அராஜகம் கொடூரத்தின் உச்சம் என்று அவர் குறிப்பிட்டார்.
பாசிசம், பாயாசம் என்று ரைமிங் வசனங்களைப் பேசிய முதலமைச்சரின் கையில் இருக்கும் காவல்துறை, உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள் மீது நடத்தியுள்ள பாசிச அக்கிரமத்தை ரீல்ஸ் முதல்வர் எப்படி நியாயப்படுத்துவார் என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இதே செவிலியர்கள் முன் நின்று கட்சி நிர்வாகிகளும், இன்று அமைச்சர்களாக இருப்பவர்களும் பேசியவை அனைத்தும் நினைவில் இருக்கிறதா என்று அவர் சுட்டிக்காட்டினார்.
ஆட்சிக்கு முன் ஒரு வகையான பேச்சு, ஆட்சிக்குப் பின் அதற்கு முரணான செயல் என்பதுதான் மாற்றமா என்று கேட்டார்.தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவுவது குறித்து மக்கள் பிரச்சினையைச் சுட்டிக்காட்டினாலும் ஏற்றுக்கொள்ள மனமின்றி அவதூறுகளை அள்ளி வீசும் நபராக இன்றைய சுகாதாரத் துறை அமைச்சர் இருக்கிறார் என்று அவர் குற்றம் சாட்டினார். தனது துறையைச் சார்ந்த செவிலியர்கள் போராடுவது குறித்து ஒரு வார்த்தை கூடப் பேசாத அமைச்சர், செவிலியர்களிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்துவதை விட என்ன பெரிய வேலை இருக்கிறது என்று கேட்டார்.
இதையும் படிங்க: அதெப்படி குறையும்..?மரகதம் குமரவேல் வருமான வரி கணக்கு..! அதிமுக கேள்வி..!
போராடும் இடத்தில் மின்சாரத்தைத் துண்டிப்பது, பேச்சுவார்த்தை எனக் கூறி அழைத்துச் சென்று கைது செய்வது என மிகவும் கீழ்த்தரமாக ஒரு போராட்டத்தை அணுகியுள்ள இன்றைய ஆச்சரியக்குறி அரசுக்குத் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்தார் எடப்பாடி பழனிசாமி. கைது செய்யப்பட்டுள்ள செவிலியர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட்டு, அவர்கள் மீது எந்த வழக்கும் பதியாமல் இருப்பதை உறுதி செய்து, ஜனநாயக ரீதியாக அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண வேண்டும் என அரசை வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: #BREAKING தேடப்படும் குற்றவாளியுடன் சி.எம்.விஜய்... கைகட்டி வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?... வீடியோ ஆதாரத்துடன் பகீர் கிளப்பிய அதிமுக...!