×
 

நர்சிங் கனவுக்கு கைகொடுக்கும் விஜய் அரசு... புதிய வாய்ப்புகள்..! அதிரடி அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 1,500 B.sc நர்சிங் இடங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

தமிழ்நாடு அரசு சுகாதாரத் துறையின் தொடர் முயற்சியாக அரசு மருத்துவக் கல்லூரிகளில் நர்சிங் படிப்புகளை விரிவுபடுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, B.Sc நர்சிங் படிப்புக்கான இடங்களை கணிசமாக அதிகரிக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. தற்போது மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் நர்சிங் படிப்பு வாய்ப்புகளை மேலும் அதிகரித்து, ஏழை எளிய மாணவர்களுக்கு மலிவான கட்டணத்தில் தரமான கல்வியை வழங்கும் நோக்கில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

தமிழ்நாட்டில் தற்போது 36 அரசு மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வரும் நிலையில், அவற்றில் 6 கல்லூரிகளில் மட்டுமே B.Sc நர்சிங் படிப்பு வழங்கப்பட்டு வருகிறது. சென்னை மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி, மதுரை மருத்துவக் கல்லூரி, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் அரசு நர்சிங் மருத்துவக் கல்லூரி ஆகியவை இதில் அடங்கும். இந்தக் கல்லூரிகளில் மொத்தம் சுமார் 350 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு போட்டி அதிகம் இருப்பதால், அரசு கூடுதல் இடங்களை உருவாக்கி மாணவர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது. 

அரசின் முக்கிய முயற்சியாக, அரசு மருத்துவக் கல்லூரிகளில் B.Sc நர்சிங் இடங்களை கூடுதலாக 1,500 உருவாக்கும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இது மாநிலம் முழுவதும் நர்சிங் படிப்பு வாய்ப்புகளை பெருமளவு அதிகரிக்கும். இந்தக் கூடுதல் இடங்கள் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்கள், குறிப்பாக கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள், மலிவான கட்டணத்தில் தரமான நர்சிங் கல்வியைப் பெற முடியும். இந்த விரிவாக்கம் சுகாதாரத் துறையில் தேவையான செவிலியர் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அரசு மருத்துவமனைகளின் சேவையை வலுப்படுத்தவும் உதவும்.மேலும், 14 அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிதாக நர்சிங் படிப்புகளைத் தொடங்கும் திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: நேரில் இணக்கம்... வெளியே விமர்சனம்? தவெக அமைச்சர்கள் மீது கவர்னர் அர்லேக்கர் அதிருப்தி!

தற்போது துணை மருத்துவப் படிப்புகளுக்கு மொத்தம் 14 அரசுக் கல்லூரிகள் மட்டுமே பயன்படுத்தப்படும் நிலையில், இந்தப் புதிய திட்டம் மூலம் பல கல்லூரிகளில் B.Sc நர்சிங் உள்ளிட்ட படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும். இது மாணவர்களுக்கு அருகிலுள்ள கல்லூரிகளில் படிக்கும் வசதியை ஏற்படுத்தி, பயணச் செலவு மற்றும் தங்குமிடப் பிரச்னைகளை குறைக்கும். அரசு மருத்துவக் கல்லூரிகளுடன் இணைக்கப்பட்ட மருத்துவமனைகளில் நேரடி பயிற்சி கிடைப்பதால், மாணவர்களின் திறன் மேம்பாட்டுக்கு இது பெரும் உதவியாக இருக்கும்.இந்தத் திட்டங்கள் அமல்படுத்தப்படுவதன் மூலம், தமிழ்நாட்டில் நர்சிங் துறையில் பணியாற்றும் தகுதிவாய்ந்த செவிலியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: சபரிவர்மன் மரணத்தில் மவுனம்... "கோழை முதல்வர்"...! திமுக காட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share