×
 

அடங்காத ரத்த வெறி... யாரும் வெளியே வர வேண்டாம்... மலை கிராம மக்களுக்கு பறந்த எச்சரிக்கை...!

மாவனல்லா கிராமத்தில் உள்ள பொதுமக்கள் மாலை 6மணிக்கு மேல் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உதகை அருகே மாவனல்லா கிராமத்தில் பழங்குடியின பெண்ணை தாக்கி கொன்ற புலி அருகே உள்ள கோ-சாலா வளாகத்திற்குள் புகுந்து காளை மாட்டை வேட்டையாட முயற்சி. படுகாயங்களுடன் புலியிடமிருந்து தப்பிய காளை மாட்டுக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. 

உதகை அருகே உள்ள மாவனல்லா கிராமத்தில் கடந்த 24ஆம் தேதி நாகியம்மாள் என்ற பழங்குடியின பெண்ணை புலி தாக்கிக் கொன்றது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் புலியை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக மாவனல்லா கிராமத்தில் உள்ள பொதுமக்கள் மாலை 6:00 மணிக்கு மேல் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் அதிகாலை நேரங்களிலும் வெளியே நடமாட வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

கிராமத்தைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில்  அந்த கிராமத்திலே உள்ள கோ சாலா என்ற மாடுகள் பராமரிக்கும் பண்ணையில்  நுழைந்து ஒரு காளை மாட்டை அந்த புலி வேட்டையாட முயன்றது. இதில் மாட்டின் முதுகு, கழுத்து, கால், முகப்பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டது.  இதனால் மேச்சலில் இருந்த மாடுகள் அனைத்தும் கத்திக் கொண்டே பண்ணைக்கு ஓடி வந்துள்ளன உடனடியாக பண்ணையில் இருந்தவர்கள் மாடுகளை பார்த்த போது காளை மாடு ரத்த காயங்களுடன் ஓடிவந்துள்ளது.

இதையும் படிங்க: #BREAKING கதற, கதற பழங்குடியின பெண்ணை கவ்விச் சென்ற புலி... ஊட்டியில் உச்சகட்ட பரபரப்பு...! 

காயப்பட்ட காளை மாடு ரத்த காயங்களுடன் இருப்பதால் எந்த தீவனத்தையும் சாப்பிட முடியாமல் தவித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் புலியின் அச்சுறுத்தலால் மக்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல மிகவும் அச்சமடைந்துள்ள நிலையில் இந்த புலியை உடனடியாக வனத்துறையினர் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோசாலை மாடுகள் வளர்ப்பு பண்ணையில் சுமார் 70 மாடுகள் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று அனைத்து மாடுகளையும் பண்ணையிலேயே கட்டி வைக்கப்பட்டு உணவளிக்கப்பட்டு வருகிறது.

கால்நடைகளை பிரதான வாழ்வாதாரமாக கொண்டுள்ள மாவனல்லா கிராமப் பகுதி மக்களுக்கு புலியின் தாக்குதல் ஒவ்வொரு நாளும் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இதையும் படிங்க: #BREAKING கதற, கதற பழங்குடியின பெண்ணை கவ்விச் சென்ற புலி... ஊட்டியில் உச்சகட்ட பரபரப்பு...! 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share