×
 

மக்களின் துயரத்திற்கு தமிழக அரசு தான் காரணம்! வடிகால் பணிகள் முழுமையடையாதது ஏன்? தவெக தலைவர் விஜய் சரமாரி கேள்வி!

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் நிலையில், வடிகால் வசதிகள் முறையாகவும், முழுமையாகவும் செய்து முடிக்கப்படாததே மக்களின் இந்தத் துயரத்திற்குக் காரணம் என்று தவெக தலைவர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார்.


சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வடிகால் வசதிகள் முறையாகவும் முழுமையாகவும் செய்து முடிக்கப்படாததே மக்களின் இந்தத் துயரத்திற்குக் காரணம் என்று  தவெக தலைவர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார். 

நான்கரை ஆண்டுக்கால ஆட்சியில் மழைநீர் வடிகால் வசதியை ஏற்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்தும் பணிகள் முடிக்கப்படவில்லை என்று அவர் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.


இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் தவெக தலைவர் விஜய் விடுத்துள்ள அறிக்கையில், "மக்கள் மீது சிறிதேனும் அக்கறையிருந்திருந்தால் கொஞ்சமாகப் பெய்த மழைக்கே இவ்வளவு தண்ணீர் தேங்கியிருக்காது" என்று தமிழக அரசின் செயல்பாடுகள் மீது பகிரங்க விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார். இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கும் சூழலில், பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்ட செங்கோட்டையன் தயார் - டிடிவி தினகரன் கடும் விமர்சனம்!

மேலும், மழையால் பாதிப்பிற்கு உள்ளாகும் மக்களுக்குத் தேவையான உதவிகளைப் பாதுகாப்போடு செய்திட வேண்டும் என்று அவர் தமது கழகத் தோழர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். அரசியல் அரங்கில் இந்தப் பிரச்சினை முக்கியத்துவம் பெறுவதால், மீதமுள்ள பருவமழைக் காலத்திலாவது மக்கள் சிரமத்திற்கு உள்ளாகாத வகையிலும், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையிலும் மழைநீர் வெளியேறும் வகையில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தமிழக அரசை திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: Breaking: திருவண்ணாமலை தீபத் திருவிழா: நகருக்குள் இருசக்கர வாகனங்களுக்குத் தடை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share