×
 

இறங்கி வந்த பாஜக... STRICT ஆக NO சொன்ன ஓபிஎஸ்! காரணம் என்ன சொன்னாரு தெரியுமா?

சென்னை வந்திருந்த பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலர் பி.எல்.சந்தோஷ் நேரில் சந்திக்க ஓபிஎஸ்க்கு அழைப்பு கொடுத்திருந்த நிலையில், அதனை அவர் மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக இருந்த இவர், பலமுறை தமிழகத்தின் முதலமைச்சராக பதவி வகித்தவர். 2017-ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்த பிறகு, ஓபிஎஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், பின்னர் தனித்தனி அணியாகவும் செயல்பட்டார்.

இருப்பினும், 2022-ல் கட்சியின் பொதுக்குழு மூலம் இபிஎஸ் ஒரே தலைவராக உயர்த்தப்பட்டதால், ஓபிஎஸ் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்தப் பின்னணியில், பாஜகவுடனான கூட்டணி மற்றும் அதன் அரசியல் உத்திகளில் ஓபிஎஸ் புறக்கணிக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தங்களது உறவை முற்றிலுமாக முறித்துக் கொண்டதாக ஓபிஎஸ் அறிவித்தார். தன்னிடம் கேட்டிருந்தால் பிரதமரை பார்க்க ஏற்பாடு செய்திருப்பேன் என்று நயினார் நாகேந்திரன் கூற, அவரை செல்போன் வாயிலாகவும் செய்திகளை வெளியிட்டும், குறுஞ்செய்திகளை அனுப்பியும் கூட நைனார் நாகேந்திரன் செவி சாய்க்கவில்லை என்று ஓபிஎஸ் ஆதாரத்துடன் நிரூபித்தார்.

இதையும் படிங்க: ஓபிஎஸுக்காக களமிறங்கும் அண்ணாமலை; டெல்லியை நோக்கி மாஸ்டர் பிளான் - இபிஎஸ், நயினாருக்கு காத்திருக்கும் ஷாக்...!

இந்த பஞ்சாயத்து ஒரு பக்கம் இருக்க, மதியாதார் தலைவாசல் மிதியாதே என்பதற்கு இணங்க ஓபிஎஸ் இன் கூட்டணி முடிவு நல்லது தான் என்று ஒரு பக்கம் பேசி வருகின்றனர். 

இந்த நிலையில், ஓபிஎஸ் இன் கூட்டணி முடிவு வருத்தம் அளிப்பதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் நேற்று சென்னை கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் கலந்து கொண்டார். அவர் ஓ பன்னீர்செல்வத்தை நேரில் சந்திக்க வருமாறு அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் தனது ஆதரவாளர்களுடன் பேசிய பிறகுதான் முடிவு செய்யப்படும் என்றும் தற்போதைக்கு நேரில் சந்திக்க வர முடியாது என ஓபிஎஸ் திட்டவட்டமாக கூறியுள்ளதாகவும் தெரிகிறது.

இதன் மூலம் ஓ பன்னீர்செல்வத்திற்கு தேசிய ஜனநாயக கூட்டணியுடன் மீண்டும் patch up ஆக வேண்டும் என்ற எண்ணம் இல்லை என்பது தெரியவருகிறது.

இதையும் படிங்க: டெல்டா, தென் மாவட்டங்களில் டப்பா டான்ஸ் ஆடப்போகுது... அதிமுக - பாஜக கூட்டணிக்கு ஓபிஎஸால் காத்திருக்கும் பேராபத்து...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share