ஒரே காரில் ஓபிஎஸ், செங்கோட்டையன் பயணம்... எடப்பாடியை சீண்டும் KAS...!
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்துவதற்காக ஓபிஎஸ் உடன் செங்கோட்டையன் ஒரே காரில் பயணம் செய்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தான் மனம் திறந்து பேசப்போவதாக அறிவித்த செங்கோட்டையன் கட்சியிலிருந்து பிரிந்தவர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டதோடு, அப்போதுதான் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க முடியும் என்றும் தெரிவித்து வருகிறார். கட்சியின் தலைமைக்கு 10 நாள் விடுவித்தார் செங்கோட்டையன்.
இதனால் ஆத்திரமடைந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்களின் கட்சி பதவியை பறித்தார். என்ன நடந்தாலும் கட்சி ஒருங்கிணைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவேன் என்றும் ஒருங்கிணைப்பு குழுவை அமைப்போம் எனவும் செங்கோட்டை என் தெரிவித்தார். அவரது இந்த முயற்சிக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் முழு ஆதரவை தெரிவித்துள்ளார்
இதனிடையே, அதிமுக தலைமைக்கு கெடு விதித்த நிலையில் முதல்முறையாக ஓ. பன்னீர் செல்வத்துடன் செங்கோட்டையன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 118 வது ஜெயந்தி விழாவை ஒட்டி அவரது திருவருட்சிலைக்கு மரியாதை செலுத்துவதற்கு ஓ பன்னீர் செல்வமும் செங்கோட்டையனும் சேர்ந்து ஒரே காரில் பயணம் மேற்கொண்டுள்ளனர். மதுரையில் இருந்து ஓபிஎஸ் காரில் ஏறி பசும்பொன் புறப்பட்டு சென்றார் செங்கோட்டையன்.
இதையும் படிங்க: இன்னும் 6 மாதத்தில் கூட்டணி சுனாமி சுழன்றடிக்கும்... எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக் கொடுத்த ஓபிஎஸ்...!
அதிமுக தலைமைக்கு எதிராக அடுத்த அதிரடியில் செங்கோட்டையன் இறங்கி இருப்பதாகவும் அதிமுக தலைமைக்கு எதிராக அடுத்த கட்ட நடவடிக்கையை தொடங்கி விட்டாரா செங்கோட்டையன் என்ற கேள்விகளும் எழுந்து பேசிப் பொருளாக மாறி இருக்கிறது. செங்கோட்டையின் மீது அதிமுக நடவடிக்கை எடுக்குமா அல்லது செங்கோட்டையன் தனது நிலைப்பாட்டை மாற்றுவாரா என்ற கேள்விகளும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: திமுக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும்… அப்புறம் என்ன அவரே சொல்லிட்டாரு..! OPS ஆருடம்..!