×
 

ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்...! முதல்வருடன் OPS திடீர் சந்திப்பு...!! சூடு பிடிக்கும் அரசியல்..!!

ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து உரையாடினார்.

தமிழக அரசியலில் இன்று ஒரு எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்துள்ளது. முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவருமான ஓ. பன்னீர்செல்வம், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த சந்திப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் ஆச்சரியத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.சட்டப்பேரவை கூட்டத் தொடர் நிறைவடைந்த பின்னர், ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் முதலமைச்சரின் அறைக்குச் சென்றார். அங்கு அவர் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து உரையாடி உள்ளார்.

சந்திப்பு சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் நீடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதில் அரசியல் விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடந்ததா என்பது அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை என்றாலும், இது வெறும் மரியாதை சந்திப்பு மட்டுமல்ல என்ற யூகங்கள் எழுந்துள்ளன. ஓ. பன்னீர்செல்வம் தற்போது அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற அமைப்பின் மூலம் தனது அரசியல் போராட்டத்தைத் தொடர்ந்து வருகிறார்.

அதிமுகவிலிருந்து ஓரங்கட்டப்பட்ட நிலையில், அவரது அடுத்தகட்ட நகர்வு குறித்து பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக இப்படியான ஒரு சந்திப்பு நடப்பது, திமுகவுடன் ஏதேனும் ஒரு வகையில் இணைவதற்கான முன்னோட்டமா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது. தமிழக அரசியலில் கூட்டணி மாற்றங்கள், புதிய சேர்க்கைகள் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ள நேரத்தில் இந்த சந்திப்பு மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படிங்க: NDA கூட்டணியில் இணையும் ஓபிஎஸ்..?? மீண்டும் தீயாய் பரவும் செய்தி..!! அரசியலில் அடுத்த ட்விஸ்ட்..!!

ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக நேற்று திமுக கூட்டணிகள் இணைந்து விட்டது. முதன்முறையாக திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்திருக்கிறது. அரசியலில் இது திருப்புமுனையாக பார்க்கப்படும் நிலையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பலரும் திமுகவில் இணைந்தனர். தற்போது ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து பேசி இருப்பது பேசு பொருளாக மாறி இருக்கிறது.

இதையும் படிங்க: ஓபிஎஸ்-ஐ கூட சேர்க்கலாமா? வேணாமா? உளவுத்துறை கொடுத்த அறிக்கை! திமுக மாஸ்டர் ப்ளான்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share