×
 

OPS அடுத்த கட்ட நகர்வு… குழுவை கழகமாக மாற்றிய சம்பவம்… என்ன விஷயம்?

அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை கழகமாக ஓபிஎஸ் மாற்றி உள்ளார்.

தமிழ்நாடு அரசியலில் அதிமுகவின் உட்கட்சி பிளவு ஒரு முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தியது. 2022-ஆம் ஆண்டு ஜூலை மாதம் அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ. பன்னீர்செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கியது. இந்த நீக்கத்தை எதிர்த்து ஓபிஎஸ் சார்பில் சட்டப் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

ஆனால் அவர் கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமான இரு இலை அல்லது கொடியை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.இந்தச் சூழலில், 2024 மார்ச் மாதம் தொடக்கத்தில் முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் மூத்த தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுnஎன்ற புதிய அமைப்பைத் தொடங்கினார். இந்தக் குழுவின் முதல் அறிவிப்பு மார்ச் 3 அன்று வெளியானது.

அதில் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகள் நியமனம் குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அமைப்பு அதிமுகவின் அடிப்படைத் தொண்டர்களின் உரிமைகளை மீட்டெடுப்பது என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. ஓபிஎஸ் இதை ஒருங்கிணைப்பாளராகவும், முன்னாள் முதலமைச்சராகவும் குறிப்பிட்டு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

இதையும் படிங்க: சீக்ரெட் சர்வே... கையில் ரிப்போர்ட் உடன் தவெகவிடம் டீல் பேசும் ஓபிஎஸ் வாரிசு...!

இந்த நிலையில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகமாக ஓ. பன்னீர்செல்வம் மாற்றியுள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் என்ற பெயரில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் கையெழுத்தின்றி தலைமை கழகம் என்ற பெயரில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த ஓபிஎஸ் தரப்பு ஆலோசனை கூட்டம் 23ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகம் ஆலோசனை கூட்டம் வரும் 23ஆம் தேதி சென்னை வேப்பேரியில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: "15 ஆண்டுகளாக செயலிழந்து கிடக்கு"... போடிக்கே போய் ஓபிஎஸை சீண்டிய பிரேமலதா விஜயகாந்த்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share