அம்புட்டும் உருட்டு… 6 முறை போன் பண்ணியும் நயினார் எடுக்கல! OPS ஓபன் டாக்.
தன்னிடம் கூறியிருந்தால் பிரதமரை பார்க்க ஏற்பாடு செய்து இருப்பேன் என நயனார் நாகேந்திரன் கூறியதற்கு ஓபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார்.
மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக இருந்த இவர், பலமுறை தமிழகத்தின் முதலமைச்சராக பதவி வகித்தவர். 2017-ல் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்த பிறகு, ஓபிஎஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், பின்னர் தனித்தனி அணியாகவும் செயல்பட்டார்.
இருப்பினும், 2022-ல் கட்சியின் பொதுக்குழு மூலம் இபிஎஸ் ஒரே தலைவராக உயர்த்தப்பட்டதால், ஓபிஎஸ் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்தப் பின்னணியில், பாஜகவுடனான கூட்டணி மற்றும் அதன் அரசியல் உத்திகளில் ஓபிஎஸ் புறக்கணிக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தங்களது உறவை முற்றிலுமாக முறித்துக் கொண்டதாக ஓபிஎஸ் அறிவித்துள்ளார். கூட்டணி தொடர்பான எந்த அறிவிப்பு குறித்தும் ஓபிஎஸ் தரப்பு வெளிப்படுத்தவில்லை. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, ஓபிஎஸ் தன்னிடம் சொல்லி இருந்தால் பிரதமரை சந்திக்க நேரம் வாங்கி கொடுத்திருப்பேன் என்றார்.
இதையும் படிங்க: “ஆட்சி மாறாது, காட்சி மாறும்”... ஓபிஎஸ் - ஸ்டாலின் சந்திப்பால் ஓவர் குஷியான செல்வப்பெருந்தகை...!
நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு ஓ.பன்னீர்செல்வம் பதிலடி கொடுத்துள்ளார். நயினார் நாகேந்திரன் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை தெரிவிப்பதாகவும், ஆறுமுறை நயினார் நாகேந்திரனை அழைக்க முயற்சி செய்ததாகவும், தனது அழைப்பை அவர் எடுக்காத நிலையில், குறுஞ்செய்தி மூலமாக பேச முயற்சி செய்ததாகவும் தெரிவித்தார். நான் அவர் எதற்கும் அளிக்கவில்லை என்று ஓபிஎஸ் கூறியுள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் கலந்து ஆலோசித்த பிறகு பிரதமரை சந்திக்க கடிதம் எழுதி இருந்ததாகவும், அவ்வளவு அக்கறை இருக்குமேயானால் நயினார் நாகேந்திரன் தனிப்பட்ட முறையில் அவரை அழைத்ததன் அடிப்படையிலோ அல்லது பத்திரிகையில் செய்திகள் வெளியிட்ட அதன் அடிப்படையிலும் ஏற்பாடு செய்திருக்கலாம்., ஆனால் எதையும் அவர் செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இதிலிருந்தே தான் பிரதமரை சந்திப்பதில் அவருக்கு விருப்பமில்லை என்பது தெரிவதாகவும், தன்னிடம் கூறியிருந்தால் ஏற்பாடு செய்திருப்பேன் என்று பேசுவது உண்மைக்கு புறம்பானது என்றும் ஓபிஎஸ் விளக்கம் அளித்தார். இனியாவது நயினார் நாகேந்திரன் உண்மை பேச வேண்டும் என்று ஓபிஎஸ் பதிலடி கொடுத்து உள்ளார்.
இதையும் படிங்க: ஓபிஎஸ் என்கிட்ட கேக்கல... முதல்வரை அவர் சந்திக்க காரணம்? நைனார் நாகேந்திரன் பேட்டி