×
 

இப்பயும் NDA கூட்டணியில் இருக்கீங்களா? மழுப்பலாக பதிலளித்த ஓபிஎஸ்...

செப்டம்பர் 4ஆம் தேதி மதுரையில் மாநில மாநாடு நடத்தப்படும் என ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

2017-ல், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுகவில் உட்கட்சி மோதல்கள் தீவிரமடைந்தன. சசிகலா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோருடனான மோதல் காரணமாக ஓபிஎஸ் தனி அணியாகப் பிரிந்தார். அதிமுகவும் பாஜகவும் 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒரு பகுதியாக இணைந்து செயல்பட்டன. இந்தக் கூட்டணியில் ஓபிஎஸ் ஒரு முக்கியப் பங்கு வகித்தார், குறிப்பாக 2021-ல் அவர் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருந்தபோது, பாஜகவுடனான கூட்டணி தொடரும் என்று அறிவித்தார். ஆனால் 2026 சட்டமன்ற தேர்தலில் யாருடன் இணைந்து போட்டியிடப் போகிறோம் என்பதை ஓபிஎஸ் இதுவரை அறிவிக்கவில்லை.

இந்த நிலையில், சென்னை கீழ்பாக்கத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஓ பன்னீர்செல்வம் உரையாற்றினார். அப்போது, அதிமுகவை மீட்டெடுப்பதற்கான சட்டப் போராட்டம் தொடரும் என்றும் அதிமுகவை மீட்கும் சட்ட போராட்டத்தில் உறுதுணையாக நின்ற அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்துக் கொண்டார். எதிர்காலத்தில் நம்முடைய நோக்கத்தை வென்றெடுப்போம் எனவும் மக்களின் நன்மதிப்பை பெற்றவர்கள் மட்டுமே முதலமைச்சர் ஆக முடியும் என்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியபோது தனது தலைமையில் வரும் செப்டம்பர் நான்காம் தேதி மதுரையில் மாநில மாநாடு நடத்தப்படும் என ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். எதிர்காலத்தில் நாம் என்ன முடிவுகளை எடுக்கப் போகிறோம் என்பது குறித்து மதுரை மாநாட்டில் அறிவிக்க உள்ளதாக கூறினார். மேலும், நீங்கள் எதிர்பார்க்கும் முடிவை மதுரையில் நடைபெற உள்ள மாநாட்டில் அறிவிப்போம் என்றும் தெரிவித்தார். எடுத்துள்ள சில முடிவுகளை வெளியே செல்ல முடியாது., அது என்ன என்பது குறித்து உங்களுக்கும் தெரியும் என்றார். அப்போது, தேசிய ஜனநாயக கூட்டணிகள் தொடர்கிறீர்களா என்ற கேள்விக்கு பன்னீர்செல்வம் மழுப்பலாக பதில் அளித்தார். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்கள் உள்ளன., எதிர்காலத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறினார்.

இதையும் படிங்க: திமுக விரைவில் சரிவைச் சந்திக்கும்... அறிவாலயத்திற்கு சவால் விட்ட ஓபிஎஸ்...!

இதையும் படிங்க: ஓபிஎஸ் உறவினருக்கு ஸ்கெட்ச் போட்ட சிபிஐ... சிக்கிய முக்கிய ஆவணங்கள்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share