ஒருங்கிணைப்பு குழு விவகாரம்... WAIT and SEE! தரமாக காய் நகர்த்தும் ஓபிஎஸ்
கட்சியை ஒருங்கிணைக்கும் முயற்சியில் விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக ஓபிஎஸ் தெரிவித்தார்.
ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவின் முக்கிய நபர்களுள் ஒருவராக இருந்தவர். மூன்று முறை தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவி வகித்தவர். 2016-ல் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், கட்சியில் ஏற்பட்ட உள்கலவரத்தில் அவர் ஒரு பிரிவின் தலைவராக உருவெடுத்தார். 2022-ல் அதிமுக பொதுக் குழுவின் முடிவுகளின்படி அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இருப்பினும், அவர் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தொழிலாளர் உரிமைகள் மீட்புக் குழு என்ற அமைப்பை உருவாக்கி, கட்சியின் உரிமைகளைப் பாதுகாக்க முயன்று வருகிறார்.
இந்தப் பின்னணியில், அவர் தொடர்ந்து அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என வலியுறுத்துகிறார். இது கட்சியின் சமீபத்திய தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு மிகவும் பொருத்தமானது.பன்னீர்செல்வத்தின் ஒன்றிணைப்புக்கான கருத்துகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டுள்ளன. அனைவருக்கும் ஒன்றிணைப்பு விருப்பம் உள்ளது. அதிமுக ஒன்றிணைந்தால் மட்டுமே கட்சியின் கொள்கைகளை நிறைவேற்ற முடியும் எனவும் சொன்னார்.
அவர் தனிப்பட்ட ரீதியாக கட்சியில் சேர குறிப்பிட்ட கோரிக்கை இல்லை என்றும், ஆனால் ஒற்றுமைக்கான அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவு தருவதாகவும் தெரிவித்தார். அது மட்டுமில்லாமல் கட்சியை ஒன்றிணைக்க வேண்டும் என்ற செங்கோட்டையனின் கருத்துக்கும் ஆதரவு தெரிவித்தார். அது மட்டுமல்லாது ஓபிஎஸ் ஆதரவாளர்களும் செங்கோட்டையனை சந்தித்து முழு ஆதரவினை தெரிவித்தனர். நிச்சயம் செங்கோட்டையனை சந்திப்பேன் என்று கூறிய ஓபிஎஸ், செங்கோட்டையனிடம் தொடர்ந்து பேசி வருவதாக கூறினார்.
இதையும் படிங்க: அப்ப மறுபடியும் PATCH UP தான் போலயே! நயினாரை சந்திப்பேன்... இறங்கி வந்த ஓபிஎஸ்
ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படும் என்று செங்கோட்டையன் அறிவித்திருந்த நிலையில் இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது விரைவில் தனது தரப்பு மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை கூட்ட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மீண்டும் PATCH UP?... OPS- கிட்ட பேசினேன்! TTV- யோடு பேசவும் தயார்... இறங்கி வந்த நயினார்!