×
 

நீயெல்லாம் செத்தவன்தான்... கல்லறை கல்லும் காரித் துப்பும்..! OPS- ஐ விளாசிய வளர்மதி..!!

ஓபிஎஸ் திமுகவில் இணைந்துள்ள நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தார்.

ஓ. பன்னீர் செல்வத்தை ஒரு துரோகத்தின் வரலாறு என அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி தெரிவித்துள்ளார். பதவிக்காய்ப் பாய்ந்தோடும் கால்கள், பயணித்த பாதையை மறந்து போனதே என்றும் பதினாறு ஆண்டுகள் நிழலில் வளர்ந்தவர் பகைவனின் மடியில் இன்று தஞ்சமானாரோ எனவும் தெரிவித்தார்.

நுனிக்கிளையில் அமர்ந்து அடிமரத்தை அறுக்கும் விந்தை என்றும் கொள்கையை விற்றுப் பிழைக்கும் வித்தை என்றும் கூறினார். அண்ணா திமுகவின் இரத்தம் குடித்த அட்டைப்பூச்சி முகவரி தந்தது இரட்டை இலை என்றும் முடிசூட்டியது இரட்டை இலை எனவும் பாலைக் குடித்துவிட்டு விஷத்தைக் கக்கும் பாம்பே, பாவமூட்டையே என சரமாரியாக சாடினார்.

எதிர்த்து நின்ற கால்கள் இன்று எதிரியின் காலை நக்கிப் பிழைப்பதா என்று விமர்சித்த வளர்மதி, மானம் பெரிதென்று வாழ்ந்த இயக்கம் விட்டு ஈனம் சுமந்து சென்றால் இனி எங்குண்டு உன் முகவரி என்றும் பச்சைப்பாம்பு என்று எண்ணினோம்., படமெடுத்தாடும் விஷப்பாம்பு எனப் புரிந்தோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ரொம்ப தப்பான முடிவு... திமுகவில் OPS... சசிகலா கடும் அதிருப்தி..!!

நிழலே துணைக்கு வராத நீயெல்லாம் தலைவனா எனவும் கூறினார். கல்லறைக்குப் போனாலும் அந்தக் கல் கூட உன்னைக் காறித்துப்பும் என்றும் துரோகம் என்றால் இனி எட்டப்பன் பெயர் அழிக்கப்பட்டு உன் பெயரே உச்சரிக்கப்படும்., சருகுகள் உதிர்வதால் கிளைகள் சாவதில்லை., சரித்திர நாயகர்கள் தடம் மாறுவதில்லை., அவர்கள் செத்தாலும் வாழ்பவர்கள்., நீயெல்லாம் இருந்தாலும் செத்தவனே எனவும் சாடியுள்ளார்.

இதையும் படிங்க: உங்க வாயால அந்த வார்த்தையா? கொச்சைப்படுத்திடீங்க ஓபிஎஸ்..! தமிழிசை ஆதங்கம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share