சட்டென மாறிய வானிலை! வெளுத்து வாங்குது மழை.. 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
தமிழகத்தில் நான்கு மாவட்டங்களுக்கு காற்றுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் ஆகிய மாவட்டங்களில் காற்றுடன் கூடிய மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுத்துள்ளது. இதனிடையே, சென்னை புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, திருவேற்காடு, மாங்காடு, குன்றத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. கோயம்பேடு, மதுரவாயில், நெற்குன்றம், வானகரம், போரூர் உள்ளிட்ட பகுதிகளும் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் எழும்பூர், நுங்கம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுட்டெரித்த வெப்பம் சட்டென மாறி பலத்த காற்று, மழை பெய்துள்ளது. சென்னையின் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து பலத்த மழை பெய்து வருவதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: மக்களே உஷார்... கொட்டித்தீர்க்கபோகும் மழை... 10 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்!!
சென்னை மாநகர சாலைகள் முழுவதும் புழுதிவாரி அடிப்பதால் செல்ல முடியாமல் மக்கள் திண்டாடினர். அண்ணாசாலை, எழும்பூர், நுங்கம்பாக்கம், மெரினா உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இருள் சூழ்ந்தது.
இதையும் படிங்க: மக்களே உஷார்... அடுத்த 3 மணி நேரத்தில் வெளுத்து வாங்க போகும் மழை; எந்த மாவட்டங்களில் தெரியுமா?