காலையிலேயே அதிர்ச்சி...!! பிரித்து மேயப்போகும் கனமழை... 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்...!
நீலகிரி, ஈரோடு, கோவை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நீடித்து வரக்கூடிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினுடைய தாக்கம் தொடர்ந்து இன்றைய தினமும் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நேற்றைய தினமே வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆனால் வலுவிழக்காமல் தொடர்ந்து தென் திசையில் நகர்ந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி வட கடலோர பகுதிகளில் 3 கிலோ மீட்டர் வேகத்திற்கு தென்மேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. நேற்று நள்ளிரவு முதலே மணிக்கு 3 கிலோ மீட்டர் வேகத்தில் புதுச்சேரிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் நீடித்து வருகிறது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தொடர்ந்து மெதுவாக நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மீண்டும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு குறைந்த பிறகும் கூட, அதனால் உருவாகும் மேகக்கூட்டங்கள் தொடர்ந்து மழை பெய்ய முக்கிய காரணியாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் காற்றழுத்த தாழ்வு பகுதியின் அடுத்தடுத்த நிகழ்வுகளுக்கு ஏற்றார் போல் மழைப்பொழிவு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி நீலகிரி, ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பொழிவதற்கான வாய்ப்பு இருப்பதால் அந்த 3 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் திருப்பூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம், திண்டுக்கல் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்றைய தினம் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கணித்துள்ளது.
இதையும் படிங்க: அடிச்சு நகர்த்தப் போகுது மழை... சென்னைக்கும் ரெட் அலர்ட்... உஷார் மக்களே...!
இதையும் படிங்க: அலற விடும் ஆரஞ்சு அலர்ட்… லிஸ்ட்- ல சென்னையும் இருக்காம்..! வெளுக்க போகுது மழை…!