×
 

எந்த மேதை குடுத்த ஐடியா தெரில… பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்.. சாடிய O.S. மணியன்..!!

பயிர் கடன் தள்ளுபடி விவகாரத்தை முதல்வர் விஜய் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என ஓ.எஸ். மணியன் வலியுறுத்தி உள்ளார்.

தமிழ்நாட்டின் புதிய அரசு, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில், 2026 மே 25 அன்று பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தை அறிவித்தது. கூட்டுறவு வங்கிகள் மூலம் பெறப்பட்ட பயிர்க்கடன்களில், குறு விவசாயிகளுக்கு ரூ.50,000 வரை முழு தள்ளுபடியும், பெரு விவசாயிகளுக்கு தலா ரூ.5,000 நிவாரணமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் சுமார் 14.22 லட்சம் விவசாயிகளுக்கு பயனளிக்கும் எனக் கூறப்பட்டாலும், இந்த அறிவிப்பு விவசாய சமூகத்தில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் வாக்குறுதிகளுக்கு மாறாக இந்தத் திட்டம் வெளியாகியிருப்பதால், விவசாயிகள் இதை “மிகப்பெரிய ஏமாற்றம்” என விமர்சிக்கின்றனர். 

தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் அறிக்கையில், சிறு-குறு விவசாயிகளுக்கு பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும், ஐந்து ஏக்கருக்கு மேல் உள்ளவர்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடி அளிக்கப்படும் என உத்தரவாதம் அளித்திருந்தது. 2021இல் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை ரூ.12,000 கோடியாக இருந்தது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது சுமார் ரூ.2,044 கோடி மட்டுமே. இது விவசாய சங்கங்களை கொந்தளிக்க வைத்துள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள், “தேர்தல் உத்தரவாதத்துக்கு மாறாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள பயிர்க்கடன் தள்ளுபடி விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் அளித்துள்ளதாக கூறுகின்றனர். இதற்கிடையில் பயிர் கடன் தள்ளுபடி தொடர்பாக முதல்வர் விஜய் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஓ.எஸ். மணியன் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: "எங்களுக்குள் பிளவு இல்லை"..! அதிமுகவில் ஒற்றுமை தான்... S.P. வேலுமணி உறுதி..!

தவெக அரசு அறிவித்துள்ள பயிர்க்கடன் தள்ளுபடியை விவசாய சங்கங்கள் கடுமையாக கண்டித்து இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார். தேர்தல் அறிக்கையில் விவசாய பயிர்க்கடன் முழுவதுமாக ரத்து என தவெக அறிவித்ததாகவும் கூறியுள்ளார். பயிர்க்கடன் குறித்து முதல்வர் விஜய் எந்த பொருளாதார மேதையிடம் யோசனை கேட்டார் என தெரியவில்லை என்று சாடிய அவர் முதல்வர் அறிவித்த பயிர்க்கடன் தள்ளுபடியை மறுபரிசீலனை செய்ய வேண்டும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். 

இதையும் படிங்க: சாமர்த்தியமாக சாதித்து காட்டிய இபிஎஸ்..! முடிஞ்சது பிரச்சனை..! மனுக்கள் வாபஸ்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share