"கண் கலங்கியபடியே"... மறைந்த இயக்குனர் பாக்யராஜ் உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை..! ஆறுதல் கூறி உருக்கம்..!
மறைந்த இயக்குனர் பாக்கியராஜ் உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.
மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த, மறைந்த இயக்குனர் பாக்கியராஜ் உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தியுள்ளார். தமிழ் திரை உலகம் மீண்டும் ஒரு பெரிய இழப்பை சந்தித்துள்ளது. நடிகர், இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா என பல முகங்கள் கொண்ட கே. பாக்யராஜ் 73 வயதில் சென்னையில் மாரடைப்பு காரணமாக காலமானார்.
அவரது மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு தனது முன்னாள் வழிகாட்டியும், இயக்குனர் இமயமுமான பாரதிராஜா மறைந்த சோகம் அடங்குவதற்குள் இந்த திடீர் மரணம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு இயக்குனர் பாக்கியராஜ் உயிரிழந்தார்.
காலையில் நடை பயிற்சி மேற்கொண்டு விட்டு வீட்டிற்கு வந்த பாக்கியராஜ் சோபாவில் அமர்ந்து மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிர் பிரிந்ததாக கூறப்பட்டுள்ளது. இயக்குனர் பாக்யராஜின் மறைவு திரை உலகத்தினரை மிகுந்த கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: "மனசார வாழ்த்தினாரே"..! நிலைகுலைந்து போயிட்டேன்... பாக்யராஜ் குறித்து அமைச்சர் ராஜ்மோகன் உருக்கம்..!!
தமிழ் திரை உலகின் தலைசிறந்த இயக்குனர் பாக்யராஜ் உடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இறுதி மரியாதை செலுத்தினார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாக்யராஜின் உடலுக்கு மாலை அணிவித்து முதல்வர் விஜய் அஞ்சலி செலுத்தியிருக்கிறார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துக் கொண்டார். இயக்குனர் பாக்யராஜுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் ஏற்கனவே அறிவித்துள்ளார். தற்போது அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பாக்யராஜ் உடலுக்கு மரியாதை செலுத்தி விட்டு கண்கள் கலங்கியபடியே முதல்வர் விஜய் வெளியே வந்தார்.
இதையும் படிங்க: மீளா துயரில் திரை உலகம்... இயக்குனர் பாக்யராஜ் உடலுக்கு ஸ்டாலின், திருமாவளவன் மரியாதை..!