×
 

தொகுதி மறுவரையறை தீர்மானத்தை ஆதரித்த திமுகவிற்கு பாராட்டு! தாம்பரம் கூட்டத்தில் ப. சிதம்பரம் பேச்சு!

தமிழ்நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் தொகுதி வரையரை சட்டத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் திமுக ஆதரித்ததற்கு ப சிதம்பரம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கும் தொகுதி மறுவரையறைச் சட்டத்திற்கு எதிராகத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்ததற்காக திமுகவை மனதாரப் பாராட்டுவதாக முன்னாள் மத்திய அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

அதேவேளையில், பரந்தூர் பசுமை வழி விமான நிலையத் திட்டத்தைக் கைவிட்டு விவசாயிகளுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய முதலமைச்சர் சி. ஜோசப் விஜயை வரவேற்பதாகவும், வரும் 2029-ல் மத்தியில் ராகுல் காந்தி பிரதமராகவும் தமிழகத்தில் விஜய் முதலமைச்சராகவும் இருப்பார்கள் என்றும் காங்கிரஸ் எம்.பி. பிரவீன் சக்ரவர்த்தி பரபரப்பாகப் பேசியுள்ளார்.

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் நடந்தது என்ன என்பது குறித்த விளக்கப் பொதுக்கூட்டம் சென்னை குரோம்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் ஆர்.எஸ். செந்தில்குமார் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், காங்கிரஸ் எம்.பி. பிரவீன் சக்ரவர்த்தி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

இதையும் படிங்க: முஸ்லிம்களுக்கு ஆதரவாக நின்றது திமுகதான்! எஸ்டிபிஐ முகம்மது முபாரக் அறிக்கை!

கூட்டத்தில் பேசிய ப. சிதம்பரம், பாஜக மத்தியில் ஆட்சி அமைத்து 12 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன; ஆனால் நாடாளுமன்ற மக்களவையில் ஒரே ஒரு முறை மட்டுமே ஒத்திவைப்புத் தீர்மானத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது, மாநிலங்களவையில் அதுகூட கிடையாது. பொதுத்தேர்வு முறைகேடுகளைத் தடுக்க முறையான சட்ட விதிகள் இல்லாமல் வெறும் தண்டனையை மட்டுமே முன்வைத்துச் சட்டம் இயற்றியுள்ளனர். 

மகாராஷ்டிரா, ராஜஸ்தான், பீகார், உ.பி போன்ற மாநிலங்களில் தேர்வு முறைகேடுகள் தொடர்கதையாகி வருகின்றன. அதேவேளையில், தொகுதி மறுவரையறை சட்டத்திற்கு எதிராக முதலமைச்சர் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தில் திமுக பங்கேற்காதது வருத்தமளித்தாலும், சட்டமன்றத்தில் கொண்டுவரப்பட்ட வரலாற்றுத் தீர்மானத்தை திமுக ஆதரித்ததை மனதாரப் பாராட்டுகிறேன் எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி. பிரவீன் சக்ரவர்த்தி, பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதன் பின்னணியில் 3 முக்கியப் பிரச்சினைகள் உள்ளன. அங்கு அதிகளவில் நீர்நிலைகள் இருப்பதும், ஏகனாபுரம் பகுதியில் பெருமளவிலான மக்கள் பாதிக்கப்பட்டதும், நிலம் கையகப்படுத்தப்பட்ட விதத்தில் தவறுகள் இருந்ததுமே அதற்குக் காரணம். 

2025-ஆம் ஆண்டு களத்திற்குச் சென்று அம்மக்களுக்கு அளித்த வாக்குறுதியை ஜனநாயக முறைப்படி ஆட்சிக்கு வந்த பிறகு முதலமைச்சர் விஜய் நிறைவேற்றியுள்ளார்; இதனை காங்கிரஸ் முழுமையாக வரவேற்கிறது. சென்னைக்கு மாற்று விமான நிலையம் தேவைதான், ஆனால் பரந்தூர் கைவிடப்பட்டதால் தொழில் வளர்ச்சி நின்றுவிடாது; வரும் 2029-ல் மத்தியில் ராகுல் காந்தி பிரதமராகவும், தமிழகத்தில் விஜய் முதலமைச்சராகவும் இருப்பார்கள் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: நேபாள பேரிடரில் சிக்கிய தமிழர்களை மீட்க கோரிக்கை! திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share