ஆமை புகுந்த வீடும்... பாஜக நுழைந்த மாநிலமும் உருப்படாது! விளாசிய ப. சிதம்பரம்
ஆமை புகுந்த வீடும் பாஜகான் நுழைந்த மாநிலமும் உருப்படாது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கடியாப்பட்டியில் நடைபெற்ற புதிய காங்கிரஸ் அலுவலக திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ப. சிதம்பரம் திறந்து வைத்தார் அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் இதுவரை வாக்குத்திருட்டு நடக்கவில்லை என்றும் பீகாரில் வாக்குத்திருட்டு நடந்துள்ளதாகவும் கர்நாடகத்தில் சில தொகுதிகளிலும் மகாராஷ்டிராவில் பல பகுதிகளிலும் வாக்குத்திட்டு நடந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டிலோ அல்லது கேரளாவிலோ வாக்குத்திருடன் நடத்த முடியாது என்று தான் உத்திரவாதம் தந்திருப்பதாகவும் காரணம் கேரளாவில் இடதுசாரி அணி ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்று வலிமையான கூட்டணிகள் இருப்பதாகவும் அதே போல் தமிழ்நாட்டில் வாக்கு திருட்டு நடத்த முடியாது என்றும் தெரிவித்தார். அதற்கு காரணம் இங்கு ஒரு கிராமத்தில் வெளி நபர் ஒருவர் நுழைந்தாலோ அல்லது வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றாலோ அனைவரும் கேள்வி எழுப்புவார்கள் என்றார்.
பீகாரில் அப்படி ஒரு நிலை இல்லாததன் காரணமாக தான் அங்கு வாக்குத்திருட்டு நடப்பதாக சுட்டி காட்டினார். தமிழ்நாட்டில் திமுக கூட்டணி வலிமையாக உள்ளதாகவும் அதேபோல எதிரணியையும் குறைத்து மதிப்பிட முடியாது என்றும் தெரிவித்தார். அதிமுக கூட்டணியும் வலிமையாக தான் இருக்கிறது என்றும் வாக்குத் திருட்டு விவகாரத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: #GST 2.0: சிறு சலுகை மக்கள் வேதனையை அடக்காது..! செல்வப்பெருந்தகை கருத்து..!
தமிழ்நாட்டிலும் வாக்கு திருட்டு முயற்சி நடக்கும் என்றும் ஏனென்றால் தமிழ்நாட்டில் பாஜக நுழைந்துள்ளதாகவும், பாஜகவோடு கூட்டணியில் உள்ள அதிமுக வாக்குத்திருட்டை அனுமதிக்க மாட்டார்கள்., ஆனால் அவர்களோடு உள்ள பாஜகவிற்கு வேலையே வாக்குத்திட்டு தான் என்றும் தெரிவித்தார். ஆமை புகுந்த வீடும் அமீனா நுழைந்த வீடும் உருப்படாது என்ற பழமொழி இருப்பதாகவும் அதேபோல பாஜக நுழைந்த மாநிலமும் உருப்படாது என்று விமர்சித்தார்.
இதையும் படிங்க: அம்பலமாகும் வாக்கு திருட்டு! செப்.7ல் மாநில மாநாடு... அணி திரள செல்வப்பெருந்தகை அழைப்பு..!