தனி பெரும் கட்சியாக வெற்றி..! தவெக தலைவர் விஜய்க்கு ப.சிதம்பரம் வாழ்த்து..!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு ப. சிதம்பரம் வாழ்த்து தெரிவித்தார்.
தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கியுள்ளது தமிழக வெற்றிக் கழகம், விஜய் தலைமையில் 2024 பிப்ரவரி 2 அன்று தொடங்கப்பட்ட இந்தக் கட்சி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனித்து அனைத்து 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னணி திராவிடக் கட்சிகளான தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகியவற்றுக்கு இடையே மூன்றாவது துருவமாக உருவெடுத்த த.வெ.க., விஜய்யின் மக்கள் செல்வாக்கை அடிப்படையாகக் கொண்டு வேகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.
கட்சி தொடங்கிய காலம் முதலே விஜய் தமிழ்நாட்டின் அரசியல் மாற்றத்திற்கான தேவையை வலியுறுத்தி வந்தார். ஊழல், நிர்வாகத் திறன் குறைபாடு, இளைஞர்கள் வேலைவாய்ப்பு, பெண்கள் பாதுகாப்பு, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் மாற்றம் ஆகியவற்றை முன்னிறுத்திய த.வெ.க., தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்த விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் தானே போட்டியிட்டார்.
இரண்டு தொகுதிகளிலும் விஜய் வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும் கட்சியாக வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அதன் தலைவர் விஜய்க்கும் மனப்பூர்வமான நல்வாழ்த்துக்கள் என்று கூறினார்.
இதையும் படிங்க: எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக..! பேரிழப்பு..! பெரும் சறுக்கல்..!!
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தொண்டர்களுக்கும் அவர்கள் அயராத தேர்தல் பணிக்கும் என் நன்றி என்றும் தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்பை ஏற்போம், நல்லாட்சி அமையட்டும் என கூறி உள்ளார்.
இதையும் படிங்க: ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் விஜய்! ஆளுநருக்கு அவசர கடிதம்!