திருவிக நகர் தொகுதியில் களமிறங்கும் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்..! இயக்குநர் பா.ரஞ்சித் பேராதரவு..!!
திரு வி க நகர் தொகுதியில் களமிறங்கும் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கிற்கு இயக்குனர் பா. ரஞ்சித் ஆதரவு தெரிவித்தார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். அவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே அதிரசெய்தது. ஆம்ஸ்ட்ராங் மறைவை அடுத்து அவரது மனைவி பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அரசியலில் ஈடுபட்டார். தற்போது தனி கட்சியை அவர் நடத்தி வருகிறார். இந்த நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவோடு கூட்டணி வைத்து திரு வி க நகர் சட்டமன்ற தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் களம் காண்கிறார். அவருக்கு இயக்குனர் பா. ரஞ்சித் ஆதரவு தெரிவித்துள்ளார்.
எளிய மக்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டுமென்பதற்காகவும்,அடித்தள மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தம் இறுதிக் காலம் வரை பணியாற்றி வந்தவர் ஆம்ஸ்ட்ராங் என்று தெரிவித்தார். கடந்த 2024 ஆம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரின் அரசியல் பணியை தொடர்ந்து முன்னெடுக்க தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியை தொடங்கினார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் என்றும் ஆம்ஸ்ட்ராங் விரும்பிய சமூக அரசியல் பயணத்தை தொடருகிறவராகவும், அவர் கொலைக்கு நியாயம் கிடைக்க போராடுபவராகவும் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் பாதை அமைந்திருக்கிறது எனவும் கூறினார்.
இந்நிலையில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திரு.வி.க நகர் தனி தொகுதியில், அஇஅதிமுக வுடன் கூட்டணியில் இணைந்து இரட்டை இலை சின்னத்தில் களம் காண்கிறார்., அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் மீது அபிமானம் கொண்டவர்களுக்கான இன்றியமையாத தருணமாக இது அமைந்திருக்கிறது என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "உழைக்கும் மக்கள் சின்னம்... விவசாயி சின்னம்"..! காரைக்குடியில் பாட்டுப் பாடி வாக்கு சேகரித்த சீமான்..!!
தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி முன்னெடுத்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தேர்தல் பங்கெடுப்பும், அதில் அவர் பெற வேண்டிய வெற்றியும் அமைந்திருக்கிறது., இந்த புரிதலோடு திரு.வி.க.நகர் தேர்தலில் போட்டியிடும் அவருக்கு நீலம் பண்பாட்டு மையம் வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: எத்தனை முனை போட்டி இருந்தாலும் திமுக தான் ஜெயிக்கும்..!! முதல்வர் ஸ்டாலின் உறுதி..!!