தமிழ்நாட்டில் உள்ள பாகிஸ்தானியர்கள்.. களத்தில் இறங்கிய மாநில அரசு.. பறந்தது அதிரடி உத்தரவு!
தமிழகத்தில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களை கண்டறிந்து அவர்களை நாளைக்குள் வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில், அதிரடி நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாகத்தான் இந்தியாவில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள் 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என்ற உத்தரவையும் மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
இதனையடுத்து தமிழகத்தில் உள்ள பாகிஸ்தான் நாட்டவரை கணக்கெடுக்கும் பணியில் தமிழக காவல் துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். நாளைக்குள் வெளியேறுமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்களை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும், அவர்களை நாளைக்குள் வெளியேற்றக்கூடிய பணிகள்ல ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: ஐ.நாவை விட்டு தூக்கணும்.. பாகிஸ்தானுக்கு எதிராக மதுரை ஆதீனம் ஆவேசம்...!
மருத்துவ சிகிச்சை, தொழில் ரீதியாக தமிழகத்திற்கு வந்தவர்களின் பட்டியலைதமிழக காவல்துறை தயார் செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதுமட்டுமின்றி தூதரகத்தில் இருந்து பாகிஸ்தான் அதிகாரிகள் வெளியேறவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் கல்லூரிகளில் படிக்கும் பாகிஸ்தான் மாணவர்கள் குறித்து கணக்கெடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மருத்துவ விசா மூலமாக சென்னை, வேலூர், கோவை உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் பாகிஸ்தானியர்களை வெளியேற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரைக்கும் 500 பேர் வரை கணக்கெடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கலிமா ஓத தெரியல சொன்னவங்கள சுட்டுடாங்க..! சம்பவத்தை நேரில் பார்த்த சிறுவன்..!.