பழனியில் பரபரப்பு... ஆட்டோ ஓட்டுநர் ஓட ஓட வெட்டிக் கொலை...!!
பழனியில் ஆட்டோ ஓட்டுநர் வெட்டி கொலை- தப்பி ஓடிய நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
பழனி அடிவாரம் அருள்ஜோதி வீதியில் சங்கர் என்ற சந்திரசேகர் என்ற 32 வயது இளைஞர் ஆட்டோ ஓட்டுநராக உள்ளார்.இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவர் வீட்டின் அருகிலேயே ஆட்டோ ஓட்டி வருகிறார்.
இந்நிலையில் இரவு நேரத்தில் ஆட்டோ ஓட்டி சென்ற சங்கரை மர்ம நபர்களால் வழிமறித்துள்ளனர். அங்கிருந்து தப்பிக்க முயன்ற சங்கரை மூன்று பேர் சேர்ந்து பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதில் இரத்த வெள்ளத்தில் சரிந்த சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த பழனி டிஎஸ்பி தனஞ்ஜெயன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க: கரூரில் அதிர்ச்சி சம்பவம்..! நகைக்காக மூதாட்டியை கொலை செய்த கும்பல்..!
போலீசாரின் விசாரணையில் ஆட்டோ ஓட்டுனர் சங்கருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலருக்கும் இடையே முன் விரோதம் இருந்ததன் நிலையில் கொலை நடந்தது தெரியவந்துள்ளது. மூன்று நபர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி... தலை முதல் கால் வரை சரமாரியாக வெட்டி முதிய தம்பதி கொலை... வெளியானது ஷாக்கிங் காரணம்...!