கொந்தளிக்கும் கடல்; சுழற்றியடிக்கும் சூறைக்காற்று... பாம்பன் பாலம் மீதான ரயில் சேவையில் அதிரடி மாற்றம்...!
சூறைக்காற்று வீசுவதால் பாம்பன் பாலத்தில் ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வங்க கடலில் உருவாகியுள்ள புயல் எதிரொலியாக ராமேஸ்வரம் தீவுப்பகுதி முழுவதும் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக விட்டு விட்டு மிதமான மழை பெய்து வரும்வது மட்டும் இல்லாது மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைகாற்று வீசி வருகிறது. இதனால் கடலோரப் பகுதியில் மண்ணரிப்பு ஏற்பட்டு பாதிப்புகள் உருவாகி வருகின்றது.
பாம்பன் பாலத்தில் தற்போது காற்றின் வேகம் மணிக்கு 58 கிலோ மீட்டர் ஆக பதிவானதால், ரயில் சேவைகளில் பின்வரும் மாற்றங்கள் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முழுமையாக ரத்து:
ரயில் எண். 16733 ராமேஸ்வரம். 28.11.2025 அன்று இரவு 10.30 மணிக்கு ராமேஸ்வரம் புறப்படவிருந்த ஓகா எக்ஸ்பிரஸ் முழுமையாக ரத்து செய்யப்பட்டது.
இதையும் படிங்க: கண்கள் சிவந்த டிரம்ப்... இந்த நாட்டவர்கள் அமெரிக்காவில் குடியேற நிரந்தர தடை... உலக நாடுகள் அதிர்ச்சி...!
ரயில்சேவையில் மாற்றம்:
ரயில் எண். 22662 ராமேஸ்வரம்-சென்னை எழும்பூர் சேது அதிவேக எக்ஸ்பிரஸ், 28.11.2025 அன்று இரவு 8.50 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் ரயில் மண்டபம் இருந்து புறப்படும்.
ராமேஸ்வரம்-சென்னை எழும்பூர் இடையே 29.11.2025 அன்று இரவு 8.50 மணிக்கு புறப்படும் ராமேஸ்வரம்-சென்னை எழும்பூர் சேது அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண். 22662) ராமநாதபுரத்தில் இருந்து புறப்படும்.
ரயில் எண் 16104 ராமேஸ்வரம் தாம்பரம் எக்ஸ்பிரஸ் 29.11.2025 அன்று மாலை 4 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் ரயில் மண்டபத்தில் இருந்து புறப்படும்.
ராமேஸ்வரத்திலிருந்து 29.11.2025 அன்று பிற்பகல் 1.30 மணிக்கு புறப்படும் ராமேஸ்வரம் திருவனந்தபுரம் சென்ட்ரல் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் (16344) ராமநாதபுரத்தில் இருந்து புறப்படும்.
ராமேஸ்வரத்திலிருந்து 29.11.2025 அன்று பிற்பகல் 3 மணிக்கு புறப்படும் ரயில் எண் 16850 ராமேஸ்வரம் திருச்சிராப்பள்ளி விரைவு ரயில் மானாமதுரையில் இருந்து புறப்படும்.
ரயில் எண் 16752 ராமேஸ்வரம் சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் 29.11.2025 அன்று மாலை 5.50 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் ரயில் மண்டபத்தில் இருந்து புறப்படும்.
ராமேஸ்வரத்திலிருந்து 29.11.2025 அன்று இரவு 21.15 மணிக்கு புறப்படும் ராமேஸ்வரம் கன்னியாகுமரி அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில் எண். 22621) மண்டபத்திலிருந்து புறப்படும்.
ரயில் எண்.16780 ராமேஸ்வரம் திருப்பதி எக்ஸ்பிரஸ், 28.11.2025 அன்று மாலை 4.30 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் ரயில் மதுரையில் இருந்து புறப்படும்.
ராமேஸ்வரத்தில் இருந்து 28 மற்றும் 29.11.2025 ஆகிய தேதிகளில் மாலை 6.15 மணிக்கு புறப்படும் ராமேஸ்வரம் - மதுரை பயணிகள் ரயில் (56716) உச்சிப்புளியில் இருந்து புறப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: திருப்பூர் சமையலர் தீண்டாமை வழக்கு.. ஆறு பேருக்கும் சிறை... நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!