×
 

பராசக்தி… 25 இடங்களில் சென்சார் கட்… “ஹிந்தி அரக்கி” வார்த்தையை நீக்கிய தணிக்கை வாரியம்..!

பராசக்தி திரைப்படத்தில் 25 இடங்களில் சென்சார் கட் செய்யப்பட்டதுடன் பல்வேறு இடங்களில் காட்சிகள் நீக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பராசக்தி திரைப்படத்தில் 25 இடங்களில் சென்சார் கட் செய்யப்பட்டுள்ளதாக மத்திய தணிக்கை குழு சான்றிதழில் வெளியாகி உள்ளது. பராசக்தி படத்தில் தற்கொலை முயற்சி சார்ந்த காட்சிகள் 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரறிஞர் அண்ணாவின் முழக்கம் தொடர்பான வாசகத்தையும் தணிக்கை வாரியம் நீக்கியுள்ளது.

11 இடங்களில் வார்த்தைகளை மியூட் செய்த பின்னரும் 14 இடங்களில் காட்சிகளில் கட் செய்த பின்னரே படத்திற்கு யூஎ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஒரு கிராமமே சூறையாடுவது போன்ற காட்சி 50% குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பராசக்தி படத்தில் தீ பரவட்டும் என்ற வார்த்தைக்கு பதிலாக நீதி பரவட்டும் என்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்று தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது.

மொழியை திணிப்பதால் ஏற்படும் பிரிவினையை குறித்த பின்னணி குரல் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்றும் சென்சார் போர்டு தெரிவித்துள்ளது. பராசக்தி படத்தில் ஹிந்தி திணிப்பு தொடர்பான சில குறிப்பிட்ட வசனங்கள் மற்றும் வாசகங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்றும் இந்தி அரக்கி என்ற வார்த்தையும் படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: #BREAKING: பராசக்திக்கு கிரீன் சிக்னல்... U/A சான்று வழங்கி சென்சார் போர்டு உத்தரவு..!

ஹிந்தி என் கனவை அழித்தது என்றால் வசனத்தையும் தணிக்கை வாரியம் நீக்கியுள்ளது. எனது ஒரே கணவையும் ஹிந்தி திணிப்பு எதிர்த்தது என்ற வாசகம் நீக்கப்பட்டுள்ளதாகவும் குழந்தைகளுடன் இருக்கும் தாயை சுட்டு கொல்வது போன்ற காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் பயன்படுத்தப்பட்ட சில சொற்கள் மற்றும் குறிப்பிட்ட சாதி, இனத்தை குறிக்கும் வார்த்தைகள் மியூட் செய்யப்பட்டுள்ளதாகவும் தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது. 

இதையும் படிங்க: #BREAKING: ஜனநாயகனுக்கு U/A சான்று… சென்சார் போர்ட் மேல்முறையீடு… தொடரும் சர்ச்சை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share