பெருஞ்சோகம்...!! - ஒரே நேரத்தில் உயிரிழந்த 2 மகன்கள்... பிஞ்சு கைகளை பிடித்து கதறி அழுத பெற்றோர்...!
ஒரே நேரத்தில் 2 குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர் பிஞ்சுகளின் கைகளை பற்றி கதறி அழுத சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பள்ளிபாளையம் அடுத்துள்ள வெப்படை தனியார் நூற்ப்பாலையின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வட மாநில குழந்தைகள் பரிதாபமாக கழிவுநீர் தொட்டியில் விழுந்து உயிரிழப்பு வெப்படை போலீசார் விசாரணை குழந்தைகளை பறி கொடுத்த பெற்றோர் கதறல்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள வெப்படை அம்மன் கோவில் வீதி பகுதியில் அமைந்துள்ள தேவேந்திரா தனியார் நூற்பாலையில் பணியாற்றும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த
மனோஜ் குமார் பிரதோஷ் ஆகிய வடமாநில தொழிலாளர்களின் குழந்தைகளான லோகன் குமார் வயது 4 ஹரிசங்கர் வயது 3 ஆகிய இரண்டு குழந்தைகள் நூற்பாலையின் அருகே உள்ள தங்கள் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த பொழுது திடீரென இருவரும் மாயமாகினர்.
குழந்தைகளை காணாது பெற்றோர் தேடிய பொழுது குழந்தைகள் இருவரும் கழிவு நீர் தொட்டியில் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைகள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ராஜ்யசபா தேர்தல் 2026: 26 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு..!! பீகார், ஒடிசா, அரியானாவில் மட்டும் போட்டி..!!
இதனையடுத்து வெப்படை போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில் குழந்தைகளை இழந்த தாயும், தந்தையும் கதறி அழுத சம்பவம் நெஞ்சை உருக்குவதாக இருந்தது. தொடர்ந்து இதுகுறித்து வெப்படை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் குமாரபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு கையெழுத்து?... முக்கிய அறிவிப்பு வெளியாகும் என தகவல்..!!