×
 

இவர்கள் இனி பெற்றோர் ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் கிடையாது... பள்ளிக் கல்வித்துறைக்கு ஸ்ரிக்ட் உத்தரவு போட்ட நீதிமன்றம்...! 

அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வி துறை சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் தற்போது படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களே பெற்றோர் ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளாக இருக்க வேண்டும் படிப்பு முடித்து வெளியேறிய மாணவர்களின் பெற்றோர்கள் நிர்வாகிகளாக செயல்படுவதை அனுமதிக்கக்கூடாது  - என அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வி துறை சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அரசு மேல் நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ஷெரீப் அப்துல்லா தாக்கல் செய்த மனு.  பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராக 2018ல் தேர்வு செய்யப்பட்டேன். பள்ளியில் இரு வகுப்பறைகள் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்தது. இந்த இரு வகுப்பறைகளையும் இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்காத நிலையில், பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இரு வகுப்பறையும் இடித்து அகற்றப்பட்டது. அனுமதி பெறாமல் வகுப்பறைகளை இடித்ததாக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

புதுக்கோட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என  மனுவில் கூறப்பட்டிருந்தது.  இந்த மனுவை விசாரித்து நீதிபதி பி.புகழேந்தி, பெற்றோர்கள், ஆசிரியர்கள் இடையே ஒருங்கிணைப்பு ஏற்படுத்துவது, மாணவர்களின் பாதுகாப்பு, நலன் தொடர்பாக ஆலோசனைகளை வழங்குவது பெற்றோர் ஆசிரியர் சங்கங்களின் பணி. தற்போது பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் மத்திய, மாநில அரசு திட்டங்களை செயல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்கின்றன எனத் தெரிவித்தார். 

இதையும் படிங்க: நெருங்கும் தீபாவளி.. ஆன்லைனில் பட்டாசு விற்றால் நடவடிக்கை பாயும்.. ஐகோர்ட் மதுரைக்கிளை கறார்..!

இருப்பினும் பள்ளி கட்டிடங்களை பொறுத்தவரை  பள்ளிக் கல்வித் துறை, பொதுப்பணித்துறை அல்லது உள்ளாட்சி அமைப்பின் சட்டப்பூர்வ அதிகாரங்களை பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் எடுத்துக்கொள்ள முடியாது எனக்கூறிய அவர்,  பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் அதன் நோக்கங்களிலிருந்து விலகிச் செல்வது துரதிர்ஷ்டவசமானது. சங்க நிர்வாகிகள் அரசியல் தொடர்புடன் தேர்வு செய்யப்படுகின்றனர். தங்கள் குழந்தைகள் பள்ளியிலிருந்து படிப்பை முடித்து வெளியேறிய பிறகும் சில பெற்றோர் சங்க பொறுப்புகளில் தொடர்கின்றனர்.

இதனால் உண்மையான பெற்றோர்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மனுதாரர் அவரது குழந்தை படிப்பை முடித்து பள்ளியிலிருந்து வெளியேறிய பிறகும் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவராக தொடர்கிறார்.

இது பெற்றோர் ஆசிரியர் சங்க பிரதிநிதித்துவத்தின் அடிப்படைக் கொள்கைக்கு எதிரானது. 
எனவே, தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் தற்போது படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களே பெற்றோர் ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளாக இருப்பது கட்டாயம் என்றும், படிப்பை முடித்து வெளியேறிய மாணவர்களின் பெற்றோர்கள் நிர்வாகிகளாக செயல்படுவதை அனுமதிக்கக்கூடாது  என அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்லக்வித்துறை சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என உத்தரவிட்டார்.

தலைமை ஆசிரியர்கள் ஒவ்வொரு கல்வி ஆண்டின் தொடக்கத்திலும் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளின் தகுதியை சரிபார்த்து அதற்கான பதிவேட்டை பராமரிக்க வேண்டும் என்றும், இந்த வழக்கில் மனுதாரரின் கோரிக்கை ஏற்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றும் நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது உரிமை ஆனா... கட் அண்ட் கறாராக கட்டுப்பாடுகளை விதித்த மதுரை ஐகோர்ட்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share