பட்டினப்பாக்கத்தில் 100 டன் மெட்ரிக் கழிவுகள்..! கரையாமல் உருக்குலைந்து கிடக்கும் விநாயகர் சிலைகள்..!!
பட்டினப்பாக்கத்தில் 100 டன் மெட்ரிக் கழிவுகள் குவிந்து கிடக்கின்றன.
சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வுகளுக்குப் பிறகு ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஒவ்வொரு ஆண்டும் மீண்டும் மீண்டும் விவாதத்திற்குரியதாக மாறி வருகிறது. பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் மற்றும் ரசாயன வண்ணப் பூச்சுகளால் செய்யப்பட்ட சிலைகள் கடலில் கரைக்கப்பட்ட பிறகு எளிதில் கரையாமல் உடைந்து உருக்குலைந்த நிலையில் கரை ஒதுங்கிக் குவிந்துள்ளன.
இந்தக் கழிவுகள் சுமார் நூறு மெட்ரிக் டன் அளவிற்கு குவியலாகக் காணப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. கடற்கரை முழுவதும் உடைந்த சிலைத் துண்டுகள், மரச்சட்டங்கள், இரும்புக் கம்பிகள், மலர் மாலைகள், பிளாஸ்டிக் அலங்காரப் பொருட்கள் எனப் பலவகைக் கழிவுகள் சிதறிக் கிடக்கின்றன. இதனால் அழகான கடற்கரை ஒரு குப்பைக் கிடங்கு போலக் காட்சியளிக்கிறது.விநாயக சதுர்த்தி விழாவின் முடிவில் ஆயிரக்கணக்கான சிலைகள் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு கடலில் கரைக்கப்படுகின்றன.
இவற்றில் பெரும்பாலானவை களிமண் அல்லாமல் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸால் தயாரிக்கப்பட்டவை. இந்தப் பொருள் நீரில் எளிதில் கரையாது. அதனுடன் சேர்த்துப் பூசப்படும் ரசாயன வண்ணங்களில் பாதரசம், காட்மியம், ஈயம் போன்ற நச்சுப் பொருட்கள் கலந்திருக்கின்றன. சிலைகள் கடலில் இறக்கப்படும்போது அலைகளால் உடைந்து துண்டுகளாக மாறி கரைக்குத் தள்ளப்படுகின்றன. பெரிய சிலைகளை கிரேன் மூலம் இறக்கினாலும் அல்லது இயந்திரங்கள் மூலம் உடைத்து வீசினாலும் அவை முழுமையாகக் கரைந்து மறைவதில்லை.
இதையும் படிங்க: பட்டினப்பாக்கம் புதிய தலைமை செயலகத்திற்கு இடைக்கால தடை கோரி மனு! சென்னை ஐகோர்ட்டில் வழக்கு!
மாறாக மாதக்கணக்கில் கடல் நீரில் மிதந்து கொண்டே இருக்கின்றன.இந்தக் கழிவுகள் கடல் வாழ் உயிரினங்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. நச்சுப் பொருட்கள் மீன்கள் மற்றும் பிற கடல் உயிரினங்களின் உடலில் சேர்ந்து உணவுச் சங்கிலி வழியாக மனிதர்களையும் பாதிக்கும் அபாயம் உள்ளது.
இதையும் படிங்க: பட்டினப்பாக்கம் தலைமைச் செயலக திட்டத்தில் திடீர் திருப்பம்! மாற்று இடம் தேடும் அரசு? விஜய் முக்கிய முடிவு!