×
 
☰

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் திட்டம்.. முதல்வர் விஜய்க்கு இடியாய் இறங்கிய செய்தி!!

அதில், சுமார் 25.55 ஏக்கர் பரப்பளவில் 20 லட்சம் சதுர அடி கட்டடம் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 

சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகம் அமைக்கும் தமிழக அரசின் திட்டம் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. கடந்த செப்டம்பர் 3ம் தேதி சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து 8ம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. அதில், சுமார் 25.55 ஏக்கர் பரப்பளவில் 20 லட்சம் சதுர அடி கட்டடம் கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 

இந்த இடம் கடற்கரைக்கு அருகிலும், கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) பகுதிக்குள் அமைந்திருப்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த அச்சம் பரவியுள்ளது. இந்த திட்டத்திற்கு எதிராக தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கறிஞர் விஜய் ஆனந்த் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில், கடலோர ஒழுங்குமுறை மதிப்பீடு மற்றும் சுற்றுச்சூழல் தாக்க ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளாமல் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், இது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைய அறிவிப்புக்கு எதிரானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அடையாறு முகத்துவாரத்துக்கு அருகிலும், 2004 சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதியிலும் அமைந்திருப்பதால், கடல்வாழ் உயிரினங்கள், ஆமைகள் இனப்பெருக்க இடங்கள் மற்றும் கடலோர சூழல் பாதிக்கப்படும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அப்பகுதி மீனவர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் இத்திட்டத்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கவலை தெரிவிக்கின்றனர். 

இதையும் படிங்க: புதிய தலைமைச் செயலகத்திற்கு ஒரே தவணையில் 1200 கோடி செலவல்ல: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்!

சுமார் 1,500 மீனவக் குடும்பங்களின் படகு நிறுத்துமிடம், வலை பழுதுபார்ப்பு, மீன் உலர்த்துதல் போன்ற அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என்றும், பின்னர் வெளியேற்றப்படலாம் என்றும் அச்சம் நிலவுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்த போதிலும், இந்த திட்டத்திற்கு எதிராக போராட்டங்களில் இறங்கியுள்ளன. மீனவர்களின் உரிமைகள், கடலோர சூழல் மற்றும் பொதுமக்கள் அணுகல் பாதிக்கப்படும் என்று அவை சுட்டிக்காட்டியுள்ளன.

இதற்கு முன்னதாக சென்னை உயர்நீதிமன்றத்திலும் திமுக சார்பிலும் தனியார் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து நெரிசல், பள்ளிகள் அருகே அமைந்திருப்பது மற்றும் பாதுகாப்பு கவலைகள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் எழுப்பப்பட்டுள்ளன. 

அரசு இந்த திட்டம் ஆரம்பக்கட்டத்தில் உள்ளதாகவும், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்ட பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. ஆனால், நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அரசு அடுத்த கட்ட நடவடிக்கைகளை எவ்வாறு மேற்கொள்ளும் என்பது கவனத்துக்குரியதாக உள்ளது.
 

இதையும் படிங்க: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்: முடிவை மறுபரிசீலனை செய்க.. வைகோ வலியுறுத்தல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share