அமைச்சரை ரவுண்டு கட்டிய தொழிலாளர்கள்... எரிச்சலில் அதிகாரிகளிடம் எகிறிய விஜய் பாலாஜியால் பரபரப்பு...!
இதனால் தொழிலாளர்கள் பயன்படுத்தி வந்த கழிப்பட இடத்தை பார்வையிட்ட அமைச்சர் கழிப்பறையின் அவல நிலையை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நூற்பாலையை ஆய்வு செய்ய வந்த அமைச்சர் விஜய் பாலாஜியை முற்றுகையிட்டு நூற்பாலை தொழிலாளர்கள் சரமாரியாக புகார். இதனால் எரிச்சல் அடைந்த அமைச்சர் எல்லை மீறி அதிகாரிளை டோஸ் விட்டதால் பரப்பரப்பு.
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் இயங்கி வரும் கூட்டுறவு நூற்பாலையில் தமிழ்நாடு கைத்திறன்,கைத்தறி,துணி நூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் திரு.எம்.விஜய் பாலாஜி இன்று ஆய்வு.இந்த ஆய்வில் குமரி மாவட்ட ஆட்சியர் பிரதாப் உடன் இருந்தார்.நூற்பாலையை ஆய்வு செய்த அமைச்சரை முற்றுகையிட்டு சுற்றி சூழ்ந்த நூற்பாலை பெண் தொழிலாளர்கள், நூற்பாலையில் பணிபுரிந்து வரும் தங்களுக்கு அடிப்படை வசதிகளான கழிப்பிட வசதிகள்,உணவு உண்ணும் இடம் உள்ளிட்ட வசதிகள் இல்லை என்றும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என சரமாரியாக புகார்கள் தெரிவித்தார்கள்.
இதனால் தொழிலாளர்கள் பயன்படுத்தி வந்த கழிப்பட இடத்தை பார்வையிட்ட அமைச்சர் கழிப்பறையின் அவல நிலையை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.இதனை அடுத்து நூற்பாலை அதிகாரிகளிடம் உங்களுக்கு நல்ல சுகாதாரமான கழிப்பறையை பயன்படுத்தி வரும் நிலையில், தொழிலாளர்களுக்கு ஏன் அவ்வாறு செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: சிரிச்சிக்கிட்டே எஸ்கேப் ஆன புஸ்ஸி ஆனந்த்... கடும் சீற்றத்துடன் கொதித்தெழுந்த ஆர்.பி.உதயகுமார்...!
இதற்கு அதிகாரிகள் பதில் கூறும் பொழுது எரிச்சல் அடைந்த அமைச்சர் அடுத்த முறை தான் நூற்பாலைக்கு ஆய்வுக்கு வரும் பொழுது தொழிலாளர்களுக்கு கழிப்பறை வசதி நன்றாக இல்லை என்றால் நீங்கள் பயன்படுத்தி வரும் கழிப்பறையை தொழிலாளர்களுக்கும், தொழிலாளர்கள் பயன்படுத்தி வரும் கழிப்பறையை அதிகாரிகளுக்கும் மாற்றி விடுவேன் என அச்சுறுத்தலாக பேசி கண்டித்ததால் நூற்பாலை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தார்கள்.கழிப்பறை வசதிகளை செய்து கொடுக்க உரிய பணத்தை துறை அமைச்சர் ஒதுக்கி தந்தால் தாங்கள் புதிய கழிப்பறைகளை அமைத்து கொடுக்க போகிறோம்.
இது கூட தெரியாமல் பண்டமாற்று முறையில் கழிப்பறைகளை மாற்றி கொடுப்பேன் என சிறு பிள்ளை தனமாக ஒரு அமைச்சர் தங்களிடம் எரிச்சலுடன் பேசியதை நொந்தப்படியே நூற்பாலை அதிகாரிகள் வேதனையுடன் சென்றார்கள்.
இதையும் படிங்க: நாளை தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி! முதல்வர் விஜய் உடன் சந்திப்பு கன்ஃபார்ம்? வெளியானது முக்கிய தகவல்!