×
 

#BREAKING விடிந்ததுமே பயங்கரம்... ஆம்னி பேருந்து மீது அதிவேகமாக மோதிய கார்... 3 பேர் உடல் நசுங்கி பலி... 4 பேரின் நிலை என்ன?

ஆம்னி பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு 2 பெண்கள் உட்பட 4 பேர் படுகாயம்

திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் (NH 38)பெரம்பலூர் துறைமங்கலம்  அருகே முன்னால் சென்ற ஆம்னி பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு 2 பெண்கள் உட்பட 4 பேர் படுகாயம்பெரம்பலூர் போலீஸார் விசாரணை

ராமாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஓரிவயல் கிராமத்தை சேர்ந்தவர்
கார்த்தி (38), சென்னையில் வேலைபார்த்து வரும் இவர் தனது சகோதரர் திருமணதிற்காக சென்னையிலிருந்து தனது மனைவி சூர்யா மற்றும் தன்னுடன் சென்னையில் ஒன்றாக வேலை பார்க்கும் தனது கிராமத்தை சேர்ந்த நண்பர்களுடன் முதுகுளத்தூருக்கு சென்றுவிட்டு நேற்று இரவு மனைவி மற்றும் நண்பர்களுடன் ஒரு காரில் சென்னைக்கு திரும்பியுள்ளார்.

இவர்களது கார் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் துறைமங்கலம் அருகே வந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளாகி   உள்ளது. தகவலறிந்து வந்த பெரம்பலூர் போலீஸார் விபத்தில் காயமடைந்த வர்களை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: இப்படியெல்லாம் கூடவா சாவு வரணும்... நடு ரோட்டில் துடிதுடித்துப் போன 2 மாடுபிடி வீரர்களின் உயிர்... இரவில் நடந்த பகீர் சம்பவம்...!

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஓரிவயிலை சேர்ந்த  காஜா (எ) காளீஸ்வரன், ராசிகுளத்தை சேர்ந்த பிரபாகரன் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாய மடைந்த கார்த்தி, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிழந்தார்

கார்த்தியின் மனைவி சூர்யா, கார் ஓட்டுனர் கண்ணதாசன், ஜான் கென்னடி மற்றும் சரண்யா ஆகியோர் பெரம்பலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில் பலத்த காயமடைந்த கார்த்தியின் மனைவி சூர்யா மேல் சிகிச்சைக்காக திருச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் . 

இதனிடையே  இறந்தவர்களின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பெரம்பலூர் போலீஸார் விபத்து குறித்து வழக்கு பதிந்து ஆம்னி பேருந்து ஓட்டுனரான தூத்துக்குயை சேர்ந்த ராஜசீலன்  என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனார்

இதையும் படிங்க: டெல்லி 6 மாடி கட்டடம் இடிந்து விபத்து! உயிரிழந்த மாணவர்கள் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share