×
 

அறிவார்ந்த பெண் அதிகாரியை காப்பாற்ற முடியவில்லையே... பீலா வெங்கடேசன் குறித்து தமிழிசை உருக்கம்...!

பீலா வெங்கடேசன் மறைவுக்கு தனது உருக்கமான பதிவை தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் நிர்வாக அமைப்பில் தனது திறமையும் அர்ப்பணிப்பும் மக்களிடம் பெரும் மரியாதையைப் பெற்றவர், ஐ.ஏ.எஸ். அதிகாரி பீலா வெங்கடேசன். கொரோனா தொற்றின் கரும்புயல் காலத்தில் சுகாதாரத்துறையை திறம்பட நடத்தி, மக்களின் உயிர்களை காப்பாற்றிய அவரது பெயர் இன்றும் ஏராளமானோரின் நினைவில் பதிந்துள்ளது. ஆனால், அந்தப் பெயர் இன்று சோகத்தின் சாயலில் மாறியுள்ளது. வெறும் 56 வயதில் அவர் உலகை விட்டு பிரிந்த செய்தி, தமிழக அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களை அதிர்ச்சியடையச் செய்தது. இது வெறும் ஒரு அதிகாரியின் மறைவு மட்டுமல்ல. ஒரு அர்ப்பணிப்பு மனதின் அகால இழப்பாகும்.

அவர் எரிசக்தித் துறையின் முதன்மைச் செயலாளராக பணியாற்றி வந்தார். அங்கு, மின்சார விநியோகம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆதாரங்கள், தமிழ்நாட்டின் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்யும் திட்டங்களை அவர் வகுத்து நடைமுறைப்படுத்தினார். அவரது தலைமையில், துறை சிறப்பான முன்னேற்றத்தைப் பெற்றது.

கடந்த இரண்டு மாதங்களாக, அவர் உடல்நலக் குறைவால் துன்புற்றார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், மூளை புற்றுநோயால் (பிரெயின் கான்சர்) பாதிக்கப்பட்டிருந்ததாகத் தெரியவந்தது. அந்தக் கடுமையான நோய், அவரது உடல் வலிமையைப் படிப்படியாகக் குறைத்தது. இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி பீலா வெங்கடேசன் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: “இரட்டை இலையுடன் தாமரை மலரும்” - அதிமுக - பாஜக கூட்டணிக்குள் குண்டைத் தூக்கிப்போட்ட தமிழிசை...!

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நேரில் சென்று பீலா வெங்கடேசனுக்கு அஞ்சலி செலுத்தினார். அவரது மறைவு குறித்து உருக்கமாக தமிழிசை சௌந்தரராஜன் பதிவிட்டுள்ளார். பீலா MBBS.IAS… இந்த பட்டங்களை பெற்ற அந்த அறிவான மூளையை எப்படிப் புற்று பற்றிக் கொண்டது., தொற்று நோயென்றால் சரி செய்து இருக்கலாம்., புற்று நோய் என்பதால் சரிய வைத்து விட்டது என கூறினார். 

கற்ற கல்வி., புற்றின் வலியை உணர்த்தி இருக்கலாம் என்றும் வாழ்விலும் பணியிலும் பெற்ற வலிகள், அந்த வலியை மறைத்திருக்கலாம் எனவும் அதனால் அவர் இன்று மறைந்திருக்கலாம் என கூறினார். அறிவார்ந்த ஒரு பெண் அதிகாரியை காப்பாற்ற முடியாமல் மருத்துவமும் சமூகமும் தலைகுனிந்து நிற்பதாக தமிழிசை சௌந்தரராஜன் வருத்தம் தெரிவித்தார். 

இதையும் படிங்க: விஜய்க்கு ஸ்கிரிப்ட் ஒழுங்கா எழுதி கொடுங்கப்பா... கலாய்த்த தமிழிசை..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share