×
 

வெள்ளத்தால் சிதைந்த வட மாநிலங்கள்! நிவாரணம் கோரும் மாநில அரசுகள்...பிரதமர் மோடி DIRECT VISIT

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வட மாநிலங்களில் பிரதமர் மோடி நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம், இந்தியாவின் வடக்கில் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு மாநிலமாகும். இயற்கை அழகுக்கும், புனித யாத்ரீக தலங்களுக்கும் பெயர் பெற்ற இந்த மாநிலம், புவியியல் அமைப்பு காரணமாக இயற்கை பேரிடர்களுக்கு ஆளாகக் கூடிய பகுதியாகவும் உள்ளது. குறிப்பாக, வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் இங்கு அடிக்கடி ஏற்படுகின்றன. 

இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் தொடர் மழையால் திடீர் வல்லம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக பெரும் சேதம் ஏற்பட்டன. 500க்கும் மேற்பட்டோர் எந்த மாநிலங்களில் உயிரிழந்துள்ளதாகவும் பல மாநிலங்களில் முக்கிய சாலைகள் தடைப்பட்டு, ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அபாய அளவை தாண்டி ஓடுகின்றன.

மேலும் விவசாய நிலங்களில் பெரும் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஹிமாச்சலப் பிரதேசத்தில் மண்டி, சிம்லா, சம்பா உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள முக்கிய வழித்தடங்களில் 1217 சாலைகள் தடைபட்டுள்ளதாகவும் 3000 கோடிக்கும் மேலாக சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிரதமரின் தீபாவளி பரிசு! GST சீர்திருத்தத்தை புகழ்ந்து தள்ளிய நயினார் நாகேந்திரன்

உத்தரகாண்டில் ஏற்பட்ட பேரழிவு காரணமாக அந்த மாநில அரசு நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கையை வைத்துள்ளது. பல லட்சம் ஹெக்டேர் விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 5,702 கோடி ரூபாய் சிறப்பு நிதி வழங்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொடர்ந்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வட இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு பிரதமர் மோடி நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார். 

மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பு நிலவரத்தை மதிப்பிடும் விதமாக பிரதமர் மோடி இந்த ஆய்வை மேற்கொள்கிறார். தொடர்ந்து நிவாரண பணிகளை மறு ஆய்வு செய்ய உள்ளார். பிரதமர் மோடியின் வருகை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: செமிகான் மாநாட்டின் 2வது நாள்.. Nano சிப்களை ஆய்வு செய்தார் பிரதமர் மோடி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share