தமிழ்நாட்டு பக்கம் வரவே கூடாது... பிரதமரின் உருவ பொம்மை எரிப்பு... கோவையில் பரபரப்பு...!
கோவைக்கு பிரதமர் மோடி வருகை தருவதை எதிர்த்து அவரது உருவ பொம்மையை எரித்துப் போராட்டம் நடத்தப்பட்டது.
கோவை கொடிசியாவில் இன்று இயற்கை விவசாயிகள் மாநாடு தொடங்குகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். சிறப்பாகச் செயல்பட்ட 18 விவசாயிகளுக்கு அவர் விருது வழங்க உள்ளார். இந்த மாநாட்டில் ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட இயற்கை விவசாயிகள் கலந்துகொள்ள உள்ளனர்.
தொடர்ந்து ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் 'பி.எம். கிசான்' திட்டத்தில் 21-வது தவணையாக 9 கோடி விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி உதவித்தொகையை விடுவிக்கிறார். பிஎம் கிஷான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டை சேர்ந்த 21 லட்சத்து 80 ஆயிரத்து 204 விவசாயிகள் பயன் அடையவுள்ளனர்.
இன்றுபிற்பகல் 1 மணிக்கு கோவை விமான நிலையம் வரும் பிரதமர் மோடி, பிற்பகல் 1.30 மணிக்கு சாலை மார்க்கமாக கொடிசியா வளாகத்திற்கு செல்கிறார். பிற்பகல் 1.45 மணி முதல் 3.20 மணி வரை இயற்கை வேளாண் கூட்டமைப்பின் விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்கும் அவர், பிற்பகல் 3.30 மணிக்கு கோவை விமான நிலையத்திற்கு வருகை புரிந்து, தனி விமானம் மூலம் புறப்பாடு செல்கிறார்.
இதையும் படிங்க: ஏமாற்றம்... மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பு... காரணம் தெரியுமா..?
இந்த நிலையில் கோவை அவிநாசி சாலை மசக்காளிபாளையம் சந்திப்பு பகுதியில் முற்போக்கு இயக்கத்தினர் பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் உருவ பொம்மை எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உருவ பொம்மையை எரித்தபடி சாலையில் ஓடிய போது தடுத்து நிறுத்தி போலீசார் அணைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
இதையும் படிங்க: அந்தப் பொண்ணோட கழுத்த நெரிச்சாங்க... கோவை சம்பவத்தை நேரில் பார்த்த பெண் பரபரப்பு தகவல்...!