×
 

இத 8 வருஷத்துக்கு முன்னாடியே செஞ்சிருக்கலாமே? பிரதமருக்கு முதல்வர் சரமாரி கேள்வி…!

ஜி எஸ் டி சீரமைப்பு விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர ஸ்டாலின் சரமாரி கேள்விகளை முன் வைத்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி நிகழ்த்திய தனது தேசிய உரையில், ஜி.எஸ்.டி சீர்திருத்தங்களை மையமாகக் கொண்டு பேசினார். இது வெறும் வரி மாற்றம் அல்ல, ஜி.எஸ்.டி பஞ்சத் உற்சவம் என்று அழைத்து, ஒவ்வொரு குடும்பத்திற்கும் மகிழ்ச்சி தரும் ஒரு பெரிய கொண்டாட்டமாக அவர் விவரித்தார். இந்த உரை, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தும், மத்திய வர்க்கம் மற்றும் ஏழைகளுக்கு நிவாரணம் அளிக்கும், ஆத்மநிர்பர் பாரத் ஒரு புதிய உற்சாகத்தை ஏற்படுத்தும் என்று அவர் உறுதியளித்தார். இந்த ஆண்டு, வரி மாற்றங்களால் மக்கள் சேமிப்பு ரூ.2.5 லட்சம் கோடி அளவுக்கு அதிகரிக்கும் என்று அவர் மதிப்பிட்டார். 

இதனிடையே, 8 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், இந்தியக் குடும்பங்கள் இன்னும் பல கோடி ரூபாயை எப்போதோ சேமித்திருக்குமே என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். ஜி.எஸ்.டி. வரிக்குறைப்பாலும் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பை உயர்த்தியதாலும் இந்தியர்கள் 2.5 லட்சம் கோடி ரூபாயைச் சேமிக்கலாம் என பிரதமர் மோடி கூறியுள்ளார் என்றும் இதைத்தானே தொடக்கத்தில் இருந்தே எதிர்க்கட்சிகளான நாங்கள் வலியுறுத்தி வந்தோம் எனவும் கேள்வி எழுப்பினார்.

8 ஆண்டுகளுக்கு முன்பே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், இந்தியக் குடும்பங்கள் பல கோடி ரூபாயை சேமித்திருக்கும் என்றும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வரிக்குறைப்பில் சரிபாதி அளவு மாநில அரசுகளின் பங்கிலிருந்துதான் செய்யப்படுகிறது எனவும் கூறினார். இந்த உண்மையை ஒன்றிய அரசு மறைப்பதாலும் பாராட்ட மறுப்பதாலும் இதனைச் சுட்டிக்காட்ட வேண்டியது தனது கடமை என்றும் கூறினார்.

இதையும் படிங்க: மோடிஜிக்கு நன்றி சொல்லுங்க... பலகாரக் கடைக்கு விசிட் அடித்த வானதி ஸ்ரீனிவாசன்...!

மற்றொரு புறம், பா.ஜ.க. அரசு மாநிலங்களுக்கு நியாயமாகச் சேர வேண்டிய நிதியைத் தர மறுத்து வருகிறது எனவும் இந்தித் திணிப்பை ஏற்க மறுக்கும் ஒரே காரணத்துக்காக, ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதி மறுக்கப்படுகிறது எனவும் குர்மசாட்டினார். இந்த அநீதி எப்போது முடிவுக்கு வரும் என கேள்வி எழுப்பிய முதல்வர் ஸ்டாலின், தங்கள் உரிமைகளைப் பாதுகாத்து, தம் மக்களுக்காக முன்நிற்கும் மாநில அரசுகளைத் தண்டிப்பதன் வழியாக இந்தியா வளர்ச்சி பெற முடியாது என்றார். கூட்டாட்சிக் கருத்தியலுக்கு மதிப்பளியுங்கள் எனவும் உரிய நிதியை விடுவியுங்கள், மக்களுக்கு நியாயமாகச் சேர வேண்டியதைத் தந்து அவர்களைப் பயனடைய விடுங்கள் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஒரு நாள் கூட மோடி லீவ் எடுக்கல... அவ்ளோ எனர்ஜி... ஆஹா ஓஹோ என புகழ்ந்த அமித்ஷா…!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share