நெருங்கும் தேர்தல்... சூடுபிடிக்கும் அரசியல் களம்..! திருச்சி, தஞ்சையில் பிரதமர் மோடி பரப்புரை..!
திருச்சி மற்றும் தஞ்சையில் பிரதமர் மோடி பரப்புரை நடத்த உள்ளார்.
பாஜகவின் தமிழகப் பயணம் 1980களின் முற்பகுதியில் தொடங்கியது. அப்போது இந்தியாவின் பிற பகுதிகளில் வேரூன்றிய இக்கட்சி, தமிழகத்தில் திராவிட அரசியலின் சவால்களை எதிர்கொண்டது. 1984 லோக்சபா தேர்தலில் வெறும் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்தாலும், 1996இல் கன்னியாகுமரி மாவட்டத்தில் சி. வேலாயுதம் என்பவரை எம்எல்ஏ ஆக்கியது அதன் முதல் மைல்கல்.
இது மிகுந்த சமூக பிரச்சினைகள், குறிப்பாக கிறிஸ்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையிலான மோதல்களைப் பயன்படுத்தியதன் விளைவு. தேசிய ஜனநாயகக் கூட்டணி உருவான 1998க்குப் பின், பாஜக அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, 1999, 2004, 2014 தேர்தல்களில் சில இடங்களைப் பெற்றது.
ஆனால், திராவிட இயக்கத்தின் சமூக நீதி, தமிழ் அடையாளம் மற்றும் மத்திய அரசுக்கு எதிரான உணர்வுகள், பாஜகவின் வளர்ச்சியைத் தடுத்தன. 2019 லோக்சபா தேர்தலில் அதிமுக உடனான கூட்டணியிலும், பாஜக தனித்து ஒரு தொகுதியை மட்டுமே வென்றது. இதனிடையே, 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியுடன் கூட்டணி மீண்டும் அறிவித்தார்.
இதையும் படிங்க: “மோடியின் அணுகுமுறையே வேறு...” - பிரதமரை ஆஹா...ஓஹோ என புகழ்ந்த திருச்சி சிவா... கடைசியில் இருக்கு ட்விஸ்ட்...!
எப்படியாவது தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி மார்ச் 11ஆம் தேதி பரப்புரை நடத்துகிறார். திருச்சி மற்றும் தஞ்சையில் பிரதமர் மோடி பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார். மதுரை மற்றும் வேலூரை தொடர்ந்து திருச்சி மற்றும் தஞ்சையில் பிரதமர் மோடி பரப்புரை மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் நெறங்கும் வேலையில் பிரதமர் மோடியின் பரப்புரை என்பது தமிழக அரசியலில் பேசுப் பொருளாக மாறி இருக்கிறது.
இதையும் படிங்க: இந்தியாவிலேயே முதல் முறை.. ‘ஹைவேஸில்’ தரையிறங்கிய பிரதமர் மோடி ப்ளைட்... அசாமில் திறக்கப்பட்ட ரூ.100 கோடி அதிசயம்...!