×
 

பிரதமர் சொல்லுறதுதான் தேர்தல் ஆணையம் கேட்கும்! சபாநாயகர் அப்பாவு பகிரங்க குற்றச்சாட்டு...!

பிரதமரின் ஆணையை இயக்கும் நிறுவனமாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என அப்பாவு குற்றம் சாட்டினார்.

இறந்தவர்கள், மாற்று இடத்திற்கு சென்றவர்கள், புதியவர்கள் என பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு பெயர் திருத்தம், முகவரி மாற்றம் என வாக்காளர் திருத்தப் பணிகள் நடைபெறுவது வழக்கம். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்கின்றன.

காரணம் தேர்தல் ஆணையம் பாஜக அரசுக்கு துணையாக செயல்படுவதாகவும் வாக்காளர் திருத்த பணிகள் மூலம் பொதுமக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் என்ற குற்றம் சாட்டி வருகின்றனர். இருப்பினும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நிச்சயம் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது. இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் நடத்தப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.

தமிழகத்தில் வாக்காளர் திருத்தப் பணிகள் நடந்து வரும் நிலையில், தமிழக அரசு கடுமையாக இதனை எதிர்த்து வருகிறது. திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வாக்காளர் திருத்த பணிகள் மேற்கொள்ள தடை இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டது. இந்த நிலையில் ஏற்கனவே 13 முறை எஸ் ஐ ஆர் பணிகள் நடைபெற்று இருப்பதாகவும் திமுக வேண்டுமென்றே குற்றம் சாட்டுவதாகவும் மத்திய நிதி அமைச்சரின் நிர்மலா சீதாராமன் பேசி இருந்தார்.

இதையும் படிங்க: மோடியும், அமித் ஷாவும் ஆட்டுவிக்கிற பொம்மை தேர்தல் ஆணையம்... சண்முகம் பகிரங்க குற்றச்சாட்டு...!

இந்த நிலையில் வாக்காளர் சிறப்பு திருத்தப் பணிகள் தொடர்பாக சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, S.I.R பணி முன்பு 13 முறை நடந்ததற்கும், இப்போது நடப்பதற்கும் வித்தியாசம் உள்ளது என்று கூறினார். தேர்தல் ஆணையம் பிரதமரின் ஆணையை ஏற்று நடக்கும் நிறுவனமாக மாறிவிட்டது என்று குற்றம்சாட்டி உள்ளார். பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்புவரை தேர்தல் ஆணையம் எந்த ஒரு சார்பும் இல்லாத அமைப்பாக இருந்தது என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வேண்டவே வேண்டாம்... SIR- க்கு வலுக்கும் எதிர்ப்பு... திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share