×
 

மத்திய கிழக்கு போர் எதிரொலி! பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆய்வுக்கூட்டம்!

பெட்ரோலியம், மின்சாரம் மற்றும் உரங்கள் ஆகிய மூன்று முக்கியத் துறைகளின் தற்போதைய நிலை குறித்து பிரதமர் விரிவாக கேட்டறிந்தார்

மத்திய கிழக்கு நாடுகளில் (மேற்கு ஆசியா) தொடர்ந்து வரும் போர்ச் சூழலால் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஒரு உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். பெட்ரோலியம், மின்சாரம் மற்றும் உரங்கள் ஆகிய மூன்று முக்கியத் துறைகளின் தற்போதைய நிலை குறித்து பிரதமர் விரிவாகக் கேட்டறிந்தார். குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்தால் ஏற்பட்டுள்ள LPG மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதிச் சிக்கல்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

நாடு முழுவதும் எரிசக்தி மற்றும் உரங்களின் விநியோகம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்; இதற்கான தளவாடப் போக்குவரத்து (Logistics) மற்றும் விநியோக முறைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்று பிரதமர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். உரங்களின் இறக்குமதி பாதிக்கப்படாமல் இருக்க ரஷ்யா மற்றும் சீனா போன்ற மாற்று நாடுகளிடம் இருந்து கொள்முதலை அதிகரிப்பது குறித்தும், சர்வதேச விலை உயர்வால் விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படாமல் இருக்க உர மானியத்தை உயர்த்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

எரிவாயு பற்றாக்குறையால் மின் உற்பத்தி பாதிக்கப்படாமல் இருக்க நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தியை அதிகப்படுத்துவது மற்றும் மாற்று எரிசக்தி ஆதாரங்களைப் பயன்படுத்துவது குறித்துப் பிரதமர் அறிவுறுத்தினார். எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களைக் கண்டித்துள்ள பிரதமர், இது தொடர்பாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட உலகத் தலைவர்களுடன் தொலைபேசியில் ஆலோசித்து வருவதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: ஈரானுக்கு முடிவுரை? ஒரே நாளில் 58 கப்பல்கள் காலி! அணு ஆயுத எச்சரிக்கையுடன் ஆவேசமாக பேசிய டிரம்ப்!

ஈரான் - அமெரிக்கப் போர் காரணமாகச் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டியுள்ளது. இதனால் இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிக்கும் அபாயம் உள்ள சூழலில், இந்தப் பிரதமர் தலைமையிலான கூட்டம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இதையும் படிங்க: துபாய் போர் பதற்றம்! பத்திரமாக சென்னை திரும்பினார் நடிகர் அஜித்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share