×
 

பிரதமர் மோடி உருவ பொம்மை எரிப்பு... போராட்டக்காரர்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு... கலவர பூமியான கும்மிடிப்பூண்டி...! 

பிரதமர் மோடியின் உருவ பொம்மையையும் எரித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.

கும்மிடிப்பூண்டியில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டம். பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்து எதிர்ப்பு. போராட்டக்காரர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு. 

நாடு முழுவதும் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து இன்று முழு வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் சிஐடியு தலைமையில் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்திற்கு பேரணியாக சென்றனர்.

மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பியபடி பேரணியாக சென்ற போராட்டக்காரர்கள் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். 
எனினும் காவல்துறையினரின் தடுப்புகளை மீறி ரயில் நிலையத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வழியே நிஜாமுதீன் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: சபாநாயகர் பேச்சு அவதூறு... முற்றுகையிட்ட காங்கிரஸ் MP-க்கள்..! வீடியோ காட்சி வெளியீடு..!

மேலும் பிரதமர் மோடியின் உருவ பொம்மையையும் எரித்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். தொழிலாளர் விரோத 4 சட்டங்களை திரும்ப பெற வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றி திட்டத்தை சீரழிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டினர். ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் 100% அந்நிய முதலீட்டை அனுமதித்ததற்கும் அணுசக்தி துறையில் தனியார் அனுமதித்ததற்கும் கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர். விதைகள் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் மின்சார சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு நாடு முழுவதும் இன்று போராட்டம் நடைபெற்று வருவதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர். 

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினரை காவல்துறையினர் அப்புறப்படுத்த முயன்ற போது இருதரப்பிற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டக்காரர்களை காவல்துறையினர் ரயில் நிலையத்திலிருந்து அப்புறப்படுத்தி 100க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். பிரதமர் மோடி கொடும்பாவி எரிப்பு, ரயில் மறியல் போராட்டம் காரணமாக கும்மிடிப்பூண்டி ரயில் நிலையத்தில் பரபரப்பு நிலவியது. இதே போல பொன்னேரி, மீஞ்சூர் ரயில் நிலையங்களில் மத்திய அரசை கண்டித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 100க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிங்க: திமுக கள்ளிச்செடி களையெடுக்கப்படும்...! நயினார் திட்டவட்டம்... விவசாயிகள் கண்ணீரை முதல்வர் வேடிக்கை பார்ப்பதாக சாடல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share