×
 

சோழ தேசத்தை நோக்கி பிரதமர் மோடி... கங்கை கொண்ட சோழபுரத்தில் சிறப்பு ஏற்பாடுகள் என்னென்ன?

கங்கைகொண்ட  சோழபுரம் விழாவில் 36 ஆதீனங்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் முன்னிலையில் தேவாரம் பாடும் 40 ஓதுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இன்று தமிழகம் வருகிறார். தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமர் மோடி, இன்று இரவு திருச்சியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்குகிறார். நாளை காலை  திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு கங்கைகொண்ட சோழபுரம் வருகை தந்து மாமன்னன் இராசேந்திர சோழனின் பிறந்தநாளான ஆடித்திருவாதிரை விழா உள்ளிட்ட முப்பெரும் விழாவில் பங்கேற்கிறார். 

ஹெலிகாப்டர் இறங்கும் தளத்திலிருந்து ரோடு ஷோ செல்லும் பிரதமர் மோடி, இருபுறமும் கூடியுள்ள  பொதுமக்களை சந்திக்கிறார். பின்னர் பிரகதீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று பெருவுடையாரை தரிசனம் செய்கிறார். கோவில் மகா மண்டபத்தில் உள்ள தாமரை வடிவிலான நவக்கிரகம் உள்ளிட்ட சிறப்பு வாய்ந்த சிற்பங்களையும், கோவிலில் வெளிப்புறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள கலைச் சிற்பங்களையும் பிரதமர் மோடி பார்வையிடுகிறார்.

பின்னர் கோவிலின் முன்புறம் உள்ள கண்காட்சியை பார்வையிடுகிறார். இதனை அடுத்து விழா மேடைக்கு செல்லும் பிரதமர் மோடிக்கு சைவ சித்தாந்த மடங்களைச் சேர்ந்த 36 ஆதீனங்கள் மற்றும் மடாதிபதிகளும் வாழ்த்து தெரிவிக்கின்றனர். தேவாரப்பாடலை 40 ஓதுவார்கள் பிரதமர் முன்னிலையில் பாடுகின்றனர். இதனையடுத்து இசைஞானி இளையராஜாவின் திருவாசகம் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதையும் படிங்க: பிரதமர் மோடி தமிழகம் வருகை... இரவோடு, இரவாக நடந்த திடீர் மாற்றம்...!

இதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி, ராஜேந்திர சோழன் திருவுருவம் பொறித்த நாணயத்தையும், திருவாசகம் உரைநடை நூலையும் வெளியிடுகிறார். விழாவில் இந்தியா கலாச்சாரத்துறை அமைச்சர், மத்திய இனைஅமைச்சர் முருகன், தமிழக ஆளுநர் ரவி ஆகியோர் உரையாற்றுகின்றனர். பின்னர் பாரத பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார்.

நிகழ்ச்சிகள் முடிந்து பின்னர் மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து புறப்பட்டு, திருச்சி விமான நிலையம் செல்லும் மோடி அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி செல்லவுள்ளார்.பிரதமர் மோடி வருகையை ஒட்டி ஹெலிகாப்டர் மைதானம், அவர் செல்லும் சாலை மார்க்கம், கங்கைகொண்ட சோழபுரம் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்புகள் போடப்பட்டு தீவிர கண்காணிப்பு போலீசார் ஈடுபட்டுள்ளனர். SPG பாதுகாப்பு படையினர், தமிழ்நாடு காவல்துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள், தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: நாளை தூத்துக்குடி வரும் பிரதமர் மோடி.. காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share