×
 

Breaking! அயோத்தி ராமர் கோயிலில் காவிக்கொடி! மக்கள் வெள்ளத்தில் மோடி!! உ.பி-யில் விழாக்கோலம்!!

அயோத்தி ராமர் கோயிலின் 161 அடி உயர கோபுரத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள 30 அடி உயர கம்பத்தில் இன்று (நவ.,25) பிரதமர் மோடி காவிக்கொடியேற்றினார்.

அயோத்தி ராமர் கோயிலின் 161 அடி உயரமுள்ள கோபுரத்தின் உச்சியில் 30 அடி உயரமுள்ள கம்பத்தில், இன்று (நவம்பர் 25) பிரதமர் நரேந்திர மோடி காவி கொடியை ஏற்றி வைத்தார். இது தர்ம துவஜாரோஹணம் (கொடி ஏற்றுதல்) என்று அழைக்கப்படும் சிறப்பு விழா. காலை 11:52 மணி முதல் பிற்பகல் 12:35 மணி வரை சுப முகூர்த்த நேரத்தில் கோலாகலமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, ராமர் கோயிலின் கட்டுமானம் முழுமையடைந்ததன் அடையாளமாகும். 

ராமரின் சூரிய குலத்தை குறிக்கும் சூரிய சின்னம், மையத்தில் ஓம் எழுத்து, மந்தாரை மரம் பொறிக்கப்பட்ட காவி கொடி, 10 அடி உயரம், 20 அடி நீளம் கொண்டது. இந்த கொடி ஏறப்பட்டதும் சங்க நாதம் ஒலிக்கப்பட்டு, பக்தர்கள் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று முழக்கமிட்டனர். பிரதமர் மோடி, கொடி பறக்கும் பார்வையில் நெகிழ்ச்சி அடைந்தார்.

முன்னதாக, அயோத்தி வந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பூகொத்து கொடுத்து வரவேற்றார். ராமர் கோயில் செல்லும் பாதையில் ரோடு ஷோ நடத்திய மோடி, சாலை இரு புறமும் திரண்ட ஏராளமான பக்தர்களின் உற்சாகத்தைப் பார்த்து புன்னகைத்தார். 

இதையும் படிங்க: Go Back Stalin... கையில் கருப்புக்கொடியுடன் போராட்டத்தில் குதித்த பாஜக இளைஞரணி... அலோக்காக தூக்கிய போலீஸ்...!

தொடர்ந்து கோயிலுக்கு சென்று சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டார். அங்கு யோகி ஆதித்யநாத், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோரும் வழிபாடு செய்தனர். கோயில் நிர்வாக சமிதி சார்பில் அவர்களுக்கு சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

இந்த விழா, ராமர் கோயிலின் கட்டுமானம் முழுமையடைந்ததன் அடையாளமாகும். 191 அடி உயரமுள்ள கோபுரத்தில் ஏற்கப்பட்ட இந்த காவி கொடி, தர்மத்தின் வெற்றியையும், பக்தர்களின் நீண்டகால கனவையும் குறிக்கிறது. விழாவில் பங்கேற்ற பக்தர்கள், ஆயிரக்கணக்கானோர், ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கோஷம் எழுப்பி மகிழ்ந்தனர். அயோத்தியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. இந்த விழா, இந்தியாவின் சமய பாரம்பரியத்தின் மீளெழுச்சியாக பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்..!! தேவசம் போர்டு எடுத்த அதிரடி முடிவு..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share