×
 

சீன ஊடுருவல்: ராகுலை கண்டு பிரதமர் பயப்படுவது ஏன்?  கரூா் எம்.பி. ஜோதிமணி அதிரடி கேள்வி!

2020-ஆம் ஆண்டு சீன ஊடுருவலின் போது முடிவெடுக்காமல் பிரதமர் காலதாமதம் செய்ததாகவும், ராணுவத்தை தவிக்கவிட்டதாகவும் கரூா் எம்.பி. ஜோதிமணி குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் சீன ஆக்கிரமிப்பு குறித்துப் பேச முயன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை ஆளுங்கட்சியினர் தடுத்த விவகாரம், தேசிய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, பிரதமர் மோடி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் மெத்தனப் போக்கைச் சாடிப் பரபரப்புப் புகார்களை முன்வைத்தார்.

கடந்த 2020-ஆம் ஆண்டு சீன ஊடுருவலின் போது, எதிர்த் தாக்குதல் நடத்த அனுமதி கோரி ராணுவம் காத்திருந்தது. ஆனால், மிக முக்கியமான அந்த இரண்டு மணி நேரம் பிரதமர் மோடி எந்த முடிவும் எடுக்காமல் தாமதித்துள்ளார். இறுதியில், 'நீங்களே முடிவெடுத்துக் கொள்ளுங்கள்' என ராணுவத் தளபதியின் தோளிலேயே சுமையை ஏற்றிவிட்டுப் பிரதமர் கைவிட்டுவிட்டார். நாட்டின் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளதை ராகுல் காந்தி அம்பலப்படுத்தியபோது, பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் மூவரும் பயந்ததை நாடே பார்த்தது. பிரதமரின் போலி பிம்பம் இன்று நொறுங்கிப் போயுள்ளது.

இதையும் படிங்க: “அதிபர் டிரம்புக்கு நன்றி!” இந்தியா - அமெரிக்கா இடையே புதிய வர்த்தக சகாப்தம்; பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

சீன விவகாரத்தில் ராகுல் பேசும்போது சபாநாயகர் ஓம் பிர்லா பலமுறை குறுக்கிட்டார். அவர் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் அழுத்தத்திற்கு ஆளாகிச் செயல்படுவது ஜனநாயகத்திற்கு அழகல்ல" என்று அவர் சாடினார். சீனாவைத் தான் கண்டு பயப்படுவது வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே ராகுல் காந்தியைப் பேச விடாமல் தடுத்தனர். இந்தியாவின் பாதுகாப்பு தற்போது சரியான கைகளில் இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.

அவையை முடக்குவது எதிர்க்கட்சிகள் அல்ல, பாஜக தான் என்று குறிப்பிட்ட ஜோதிமணி, சீன ஊடுருவல் விவகாரத்தை மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் செல்வது குறித்து ஆலோசித்து விரைவில் அடுத்தகட்டப் போராட்டங்கள் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: “விடைபெறுகிறார் மக்கள் தலைவர்!” - இன்று பாராமதியில் அஜித் பவாரின் இறுதி சடங்கு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share