×
 

அசாதாரண சூழலில் மத்திய அமைச்சரவை கூட்டம்... முப்படைகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு!

ஆப்ரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக நிகழ்த்திய நிலையில், முப்படைகளுக்கும் மத்திய அமைச்சர்களுக்கும் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஆப்ரேஷன் சிந்தூரை இந்தியா வெற்றிகரமாக நிகழ்த்தி உள்ள நிலையில், இந்திய ராணுவம் தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் பிரதமர் மோடியுடன் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத்சிங் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.

இந்தியா நடத்திய தாக்குதல் தொடர்பாகவும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் அவசரமாக மத்திய அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டது. இதனிடையே பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் ஒத்திவைக்கப்படுவதாக அதிரடி அறிவிப்பு வெளியானது. இந்த நிலையில் மத்திய அமைச்சரவை கூட்டம் முடிந்த நிலையில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வெற்றிகரமாக தாக்குதல் நடத்திய நிலையில் முப்படைகளுக்கு பாராட்டு தெரிவித்தார். ஆப்ரேஷன் சிந்தூர் மிக சரியான நடவடிக்கை என்றும் மத்திய அமைச்சர்களுக்கும் பாராட்டு கூறினார். பகல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி முழு சுதந்திரம் கொடுத்திருந்தார். 15 நாட்களில் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்ற உத்தரவோடு இதனை கூறியிருந்தார். இந்த நிலையில், தீவிரவாதிகள் மீதான இந்த தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. கணவனை இழந்த பெண்களின் குங்குமம் அழிக்கப்பட்டதற்கு பதிலடியாக நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரை பிரதமர் மோடி தேர்வு செய்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் தாக்குதலை வெற்றிகரமாக செய்து முடித்ததற்கு தனது பாராட்டுகளை பிரதமர் மோடி பதிவு செய்தார். தொடர்ந்து பேசிய அவர், வளரும் நாடுகளுக்கான விண்வெளி தொழில்நுட்ப உதவிகளை இந்தியா வழங்கி வருவதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: தீவிரவாத அச்சுறுத்தலா? பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் அதிரடியாக ஒத்திவைப்பு...

நாசாவோடு இணைந்து விண்வெளி நிலையத்தை அமைக்க இந்தியா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றும் 2035 ஆம் ஆண்டில் சர்வதேச விண்வெளி நிலையத்தை இந்தியா அமைக்க உள்ளது எனவும் கூறினார். மேலும் இந்தியா விண்வெளி துறையில் வரலாறு படைத்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இந்தியாவை சீண்டினால் இனி இப்படி தான்... எச்சரிக்கும் அமித்ஷா!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share