×
 

பணி சிறக்கட்டும் சூர்யகாந்த்... சுப்ரீம்கோர்ட் புதிய தலைமை நீதிபதிக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள சூரியகாந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் நீதித்துறையின் உச்சத்தில் உள்ள உச்ச நீதிமன்றம், அந்நியாயத்தை எதிர்த்துப் போராடி, அரசியலமைப்பைப் பாதுகாக்கும் பொறுப்பைத் தொடர்ந்து ஏற்கிறது. 2025 நவம்பர் 24 அன்று, இந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியில் ஒரு முக்கியமான மாற்றம் ஏற்பட்டது. முந்தைய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, நீதிபதி சூர்ய காந்த் புதிய தலைமை நீதிபதியாகப் பதவியேற்றார். 

சூர்யகாந்த் 2007 முதல் 2011 வரை தேசிய சட்ட சேவை ஆணையத்தின் ஆளும் உறுப்பினராக இருந்து, ஏழை மக்களுக்கு சட்ட உதவியை வழங்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். இந்தக் காலகட்டத்தில் அவர் பல தேசிய மற்றும் சர்வதேச மாநாடுகளை ஏற்பாடு செய்து, சட்ட விவாதங்களில் பங்கேற்று, தனது அறிவை விரிவுபடுத்தினார். 2011இல் குருக்ஷேத்திரா பல்கலைக்கழகத்தில் LL.M. பட்டத்தை முதல் மாணவனாகப் பெற்றது அவரது கல்வி ஆர்வத்தின் சான்று. நீதிபதியாக அவரது பயணம் 2004இல் தொடங்கியது. 2018 அக்டோபர் 5இல் இமாச்சல் பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றார். 2019 மே 24- ல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக சூர்யகாந்த் உயர்த்தப்பட்டார்.

தற்போது, உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூரியகாந்த் பதவியேற்றார். அவருக்கு குடியரசு தலைவர் திரௌபதி மூலமும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த டி ஆர் கவாய் ஓய்வு பெற்ற நிலையில் புதிய நீதிபதியாக சூரியகாந்த பதவியேற்றார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்ற சூரியகாந்த் 2027 பிப்ரவரி ஒன்பதாம் தேதி வரை 15 மாதங்கள் பதவியில் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் நட்டா, அமித் ஷா, ராஜ்நாத் சிங் பங்கேற்றனர். மேலும் இந்த விழாவில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா, துணைநிலை ஆளுநர் சக்சேனா, தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். 

இதையும் படிங்க: உச்சநீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியானார் சூர்யகாந்த்... ஜனாதிபதி திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம்...!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுள்ள சூரியகாந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய தலைமை நீதிபதியாக நீதிபதி சூர்யா காந்த் பதவியேற்கும் விழாவில் கலந்து கொண்டதாக தெரிவித்தார். அவரது எதிர்கால பதவிக்காலத்திற்கு வாழ்த்துக்கள் என்றும் கூறினார்.

இதையும் படிங்க: புதிய தொழிலாளர் சட்டம் பிரதமரின் தற்சார்பு பாரத கனவு… நயினார் நாகேந்திரன் பெருமிதம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share